NATIONAL

மகளிர்  தனிநபர் சைக்கிள் ஒட்ட வீரர் தேசிய சாதனையை முறியடித்தார், ஆனால்  தோல்வியைத் தழுவினார்

கோலாலம்பூர், ஏப்ரல் 25: கனடாவின் மில்டனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சர்வதேச சைக்கிள் ஓட்டுதல் யூனியன் (யுசிஐ) நேஷன்ஸ் கோப்பை சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் தனிநபர் ஸ்பிரிண்ட் போட்டியில் வெண்கலப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை தேசிய டிராக் சைக்கிள் வீரர் முஹமட் ஷா பிர்தௌஸ் சாஹ்ரோம் தவறவிட்டார்.

முஹமட் ஷா ஃபிர்தௌஸ், 2022 காமன்வெல்த் விளையாட்டு ஆண்கள் ஸ்பிரிண்ட் சாம்பியனான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மேத்யூ ரிச்சர்ட்சனிடம் 2-0 என்ற கணக்கில் தோல்வியை தழுவினார்

டிரினிடாட் மற்றும் டொபாகோவின் பிரதிநிதியான நிக்கோலஸ் பால், போலந்தின் ரைடர் மேட்யூஸ் ருடிக் என்பவரை 2-0 என்ற கணக்கில் தோற்கடித்து அவ் விளையாட்டு போட்டியின் வெற்றியாளராக தேர்தெடுக்கப்பட்டார்.

இதற்கிடையில், வளர்ந்து வரும் தேசியப் பெண் சைக்கிள் ஓட்டும் வீராங்கனையான நூருல் இஸ்ஸா இஸ்ஸாதி முகமட் அஸ்ரி, தகுதிச் சுற்றில் 11.057 வினாடிகள் (வி) தனிநபர் ஸ்பிரிண்ட் போட்டிக்கான புதிய தேசியச் சாதனையை வெற்றிகரமாகப் படைத்தது பரபரப்பை ஏற்படுத்தினார்.

கடந்த ஆண்டு நெகிரி செம்பிலானில் உள்ள நிலாயில் தனது சக வீரரான அனிஸ் அமிரா ரோஸ்டியின் 11.094 வினாடிகளின் சாதனையை அவர் முறியடித்தார்.

நூருல் இசா தகுதிச் சுற்றுக்கு வெற்றிகரமாக முன்னேறிய போதிலும், அவர் 1/16 சுற்றில் மெக்சிகோ வீரரான யூலி வெர்டுகோ ஒசுனாவிடம் தோல்வி அடைந்து அடுத்த கட்டத்திற்கு முன்னேற முடியவில்லை.

கிரேட் பிரிட்டனைச் சேர்ந்த லோரி தாமஸால் அனிஸ் அமிராவும் 1/16 சுற்றில் வெளியேறினார்.

கடந்த வெள்ளிக்கிழமை, பெண்கள் அணி ஸ்பிரிண்ட் போட்டியில் அனிஸ் அமிரா மற்றும் நூருல் அலியானா சயாஃபிகா அஜிசான் ஆகியோருடன் சேர்ந்து பங்கேற்ற நூருல் இசா 50.172 வினாடிகளைப் பதிவுசெய்து அவர்களின் பழைய தேசிய சாதனையான 50.388 வினாடிகளைக் கடந்த பிப்ரவரியில் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் முறியடித்தனர்.

– பெர்னாமா


Pengarang :