SELANGOR

ஆயர் சிலாங்கூர் இணையக் கட்டணச் சேவையை வைத்திருப்பவர்களுக்கு RM5 மதிப்புள்ள செட்தைம் “Chatime“ வவுச்சர்கள் வழங்கப்படும்

ஷா ஆலம், ஏப்ரல் 25: இணையக் கட்டணச் சேவை (இ-பில்லிங்) மூலம் பதிவு செய்த ஆயர் சிலாங்கூர் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு RM5 மதிப்புள்ள மொத்தம் 10,000 செட் டைம் “Chatime“ பானங்களுக்கான வவுச்சர்கள் வழங்கப்படுகின்றன.

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு புதிய இ-பில் வாடிக்கையாளர்களுக்கு மார்ச் 28 முதல் மே 23 வரை இச்சலுகை வழங்கப்படும் என்று ஆயர் சிலாங்கூர் தெரிவித்தது.

“இந்த அற்புதமான வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்! 10,000 செட்டைம் வவுச்சர்கள் புதிய இ-பில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்.

“இப்போது மின் கட்டணத்திற்குப் பதிவு செய்து, ஆயர் சிலாங்கூர் செயலி மூலம் உங்கள் நீர் கட்டணத்தை செலுத்துங்கள்” என்று முகநூலில் தெரிவிக்கப்பட்டது.

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை www.airselangor.com/air-selangor-x-chatime-campaign-2023/ என்ற இணைப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

ஆயர் சிலாங்கூர் இ-பில் பதிவு செய்வதற்கான ஐந்து எளிய வழிமுறைகள்:

  • ஆயர் சிலாங்கூர் செயலியைப் பதிவிறக்கவும்

  • இ-பில்லில் பதிவு செய்யவும்

  • அச்செயலி மூலம் கட்டணத்தைச் செலுத்துவது

  • ஒரு தனிப்பட்ட குறியீடு வெற்றியாளருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்

  • வவுச்சர்களை அருகிலுள்ள செட் டைம் கிளைகளில் பயன்படுத்தி கொள்ளவும்


Pengarang :