NATIONAL

இரண்டு புரோட்டான் பெர்சோனா கார்கள் மோதிய விபத்தில் 6 பேர் பலி

சுகாய், ஏப்ரல் 25: நேற்று பிற்பகல் சென்னேவில் உள்ள ஜாலான் ஜெரங்காவ்-ஜபோர் கிலோமீட்டர் 153இல் இரண்டு புரோட்டான் பெர்சோனா கார்கள் மோதிய விபத்தில் 6 பேர் பலியாகினர். அவர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கெமாமன் மாவட்டக் காவல்துறை தலைவர் சூப்ரிண்டெண்டன்  ஹன்யான் ரம்லான், முதல் புரோட்டான் பெர்சோனா காரில் இருந்த நால்வர், நாடியா நத்தாஷா அபு பக்கார் (23), நூர் சியாஃபினாஸ் நௌரா சைபுல் அஸ்வான் (2) துவான் யா டொல்லா (61) மற்றும் ரோஸ்லிசா மாட் உசின் (38) ஆகியோர் உயிரிழந்தனர்.

காரை ஓட்டிச் சென்ற ஷா ரெசல் சன்சலானி (27), மேலும் மூன்று பயணிகளான வான் முகமட் ஆடம் வான் முகமது கலீல் (11); வான் ஆல்யா ஃபர்ஹானா வான் முகமது கலீல் (15); மற்றும் நூர் சியாஃபனா நஷா சைபுல் அஸ்வான் (2) ஆகியோர் காயங்களுக்கு உள்ளாகினர்.

“இரண்டாவது புரோட்டான் பெர்சோனாவில், பயணித்த அப்துல் ஹலீம் இஸ்மாயில் (71) மற்றும் இரண்டு வயது அலிஷா மர்தியா முகமட் உபைடில்லா ஜிக்ரி ஆகியோர் உயிரிழந்தனர். முகமட் உபைடில்லா ஜிக்ரி அட்னான் (26) மற்றும் இரண்டு பயணிகளான நூருல் ஃபாத்திஹா அஸ்மான் (28) மற்றும் சைதோன் முகமட் (57), ஆகியோர் காயமடைந்தனர், ”என்று அவர் நேற்று நள்ளிரவு ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் நேற்று மாலை 5 மணியளவில் புக்கிட் பெசி, டுங்குன் என்ற இடத்திலிருந்து சென்னேவுக்குச் சென்று கொண்டிருந்த ஷா ரெசல் ஓட்டிச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து எதிர் பாதையில் நுழைந்தபோது  விபத்தை தவிர்க்க முடியாமல் இரண்டு கார்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

“பாதிக்கப்பட்ட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர் மேலும், இருவர் கெமாமன் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.

“அனைவரின் உடல்களும் கெமாமன் மருத்துவமனை தடயவியல் பிரிவுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. மேலும் காயமடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காக அதே மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்,” என்றார் அவர். இந்த வழக்கு பிரிவு 41 (1)இன் சாலை போக்குவரத்து சட்டம் 1987 கீழ் விசாரிக்கப்படுகிறது.

– பெர்னாமா


Pengarang :