NATIONAL

சிலாங்கூர் கடல் வழி நுழைவாயில் (SMG) திட்டம் அரசாங்கத்தின் நிலைத்தன்மைக்கான தங்க விருதை வென்றது

ஷா ஆலம், ஏப்ரல் 26: கிள்ளான் ஆற்று நீர் கடலில் கலக்கும் முன் குப்பைகளை அகற்றி நீரை சுத்தப்படுத்தும் லண்டாசான் லுமயான் (Landasan Lumayan Sdn Bhd) (LLSB)“ செயல்படுத்திய சிலாங்கூர் கடல்வழி நுழைவாய் (SMG) திட்டம் சுற்றுச்சூழல் விருது வழங்கும் விழாவில் கிரீன் வேர்ல்ட் விருதுகள் 2023 இல் சிலாங்கூர் அரசாங்கத்தின் நிலைத்தன்மைக்கான தங்க விருதை வென்றது.

இந்த ஆண்டுக்கான விருதுக்கு பதிப்பில் புதிய பொருளாதார வாய்ப்புகளுக்காகவும், சமூக நலனுக்காகவும் கிள்ளான் நதியை மேம்படுத்தும் திட்டத்திற்கு, , உலகம் முழுவதிலுமிருந்து பெறப்பட்ட 500க்கும் மேற்பட்ட பரிந்துரைகளில் போட்டியிட்டதாக “LLSB“ இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நிறுவனத்தின் கருத்துப்படி, விருதின் வெற்றியின் விளைவாக, பசுமை உலகத் தூதுவர் இயக்கத்தில் சேர “LLSB“ அழைக்கப்பட்டது மற்றும் அதனுடைய வெற்றிக் கட்டுரை சுற்றுச்சூழல் சிறந்த நடைமுறைகள் பற்றிய முன்னணி சர்வதேச குறிப்பான “The Green Book“ இல் வெளியிடப்பட்டது.

அமெரிக்காவின் மியாமியில் 24 ஏப்ரல் நடைபெற்ற விழாவில், LLSB-யின் ஹோல்டிங் நிறுவனமான சிலாங்கூர் மந்திரி புசார் (கட்டமைப்பு) இன் தலைமைச் செயல் அதிகாரி நோரிடா முகமட் சிடேக், LLSB-ன் கார்ப்பரேட் சர்வீசஸ் இயக்குநர் நினி சரினா அமட் ஷம்லி உடன் இணைந்து விருதுக்கான கோப்பை மற்றும் பாராட்டுச் சான்றிதழைப் பெற்றார்.

இந்த விருதை “The Green Organisation“ இன் நிறுவனர் மற்றும் “Roger Wolens“இன் தலைவர் வழங்கினார்.

சிலாங்கூர் கடல்வழி நுழைவாய் திட்டத்திற்காக “LLSB“ பெற்ற இரண்டாவது சர்வதேச விருது இதுவாகும். அந்நிறுவனம் முன்பு நிலைத்தன்மை விருதுகள் 2022 இல் சிறந்த அரசாங்க நிலைத்தன்மை திட்டத்திற்காக வெள்ளியைப் பெற்றது.

– பெர்னாமா


Pengarang :