SELANGOR

ஐடில்பித்ரி கொண்டாட்டத்தின் முதல் இரண்டு நாட்களில் 7,643.15 டன் கழிவுகள் சேகரிப்பு

ஷா ஆலம், ஏப்ரல் 27: ஐடில்பித்ரி கொண்டாட்டத்தின் முதல் இரண்டு நாட்களில் KDEB கழிவு மேலாண்மை (KDEBWM) 7,643.15 டன் வீட்டுக் கழிவுகளை சேகரித்தது.

அதன் நிர்வாக இயக்குநர் டத்தோ ராம்லி முகமட் தாஹிர் கூறுகையில், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் கிட்டத்தட்ட 10,000 டன் குப்பைகள் பதிவான நிலையில் இவ்வாண்டு அதன் அளவு குறைந்துள்ளது.

“இலவசச் சுங்கக் கட்டணம் மட்டுமின்றி நீண்ட விடுமுறை காரணமாக இந்த மாநிலத்தில் வசிப்பவர்கள் பலர் ராயா பண்டிகையை கிராமத்தில் கொண்டாடுவதால் குப்பையின் அளவு  குறைவாக உள்ளது.

“சில நேரங்களில் குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை குறைந்தாலும். KDEBWM அதன் பொறுப்புகளைத் தொடர்கிறது. KDEBWM ஆண்டு முழுவதும் ஒவ்வொரு நாளும் வேலை செய்கிறது,” என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

ஐடில்பித்ரி கொண்டாட்டத்திற்கு முன், மாநில அரசின் துணை நிறுவனம், வீட்டுக் கழிவு சேகரிப்பை முழுமையாக நிர்வகித்தது, குறிப்பாக முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் மொத்த கழிவு சேகரிப்பை மேற்கொண்டது.


Pengarang :