NATIONAL

மடாணி கெடா பேரணியில் 10,000 பேர் கலந்து கொள்வர்

அலோர்ஸ்டார், ஏப் 27- இங்குள்ள ஸ்டார்கேட் சதுக்கத்தில் நாளை
வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கும் 2023 மடாணி கெடா பேரணியில்
சுமார் 10,000 பேர் வரை கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பேரணியில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும்
துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமது ஜாஹிம் ஹமிடின் ஆகியோர்
கலந்து சிறப்புரையாற்றுவர் என்று பேரணி நிகழ்வின் ஏற்பாட்டுக் குழு
இயக்குநர் டத்தோ ஜம்ரி யூசுப் கூறினார்.

மாலை 5.00 மணிக்குத் தொடங்கும் இந்த நிகழ்வில் வட்டாரத்
தலைவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்கும் சொற்பொழிவு
நடைபெறும் என்பதோடு மலேசியா மடாணி கோட்பாடு குறித்து அவர்கள்
தங்கள் கருத்தை வெளியிடுவார்கள் என்றும் அவர் சொன்னார்.

நிலைத்தன்மை, சுபிட்சம், ஆக்கத் திறன், மதிப்பு, நம்பிக்கை மற்றும்
கருணை ஆகிய அம்சங்களை உள்ளடக்கிய மலேசியா மடாணி
கோட்பாட்டை மக்களுக்கு எடுத்துரைக்கும் நோக்கில் இந்நிகழ்வு
நடத்தப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் கலந்து கொள்ளும் பொது மக்கள் தலைவர்களுடன்
கலந்துரையாடுவதற்குரிய வாய்ப்பும் ஏற்படுத்தித் தரப்படும் என்று சுக்கா
மெனாந்தி சட்டமன்ற உறுப்பினரும் மாநில எதிர்க்கட்சித் தலைவருமான
அவர் சொன்னார்.

-பெர்னாமா


Pengarang :