SELANGOR

சுமார் 10,000 குடியிருப்பாளர்கள் உலு பெர்ணம் ஜெலாஜா கித்தா சிலாங்கூர் ஐடில்ஃபித்ரி நிகழ்வில் கலந்த கொண்டனர்

உலு சிலாங்கூர், ஏப்ரல் 30: நேற்றிரவு இங்குள்ள உலு பெர்ணம் பொது திடலில் சுமார் 10,000 குடியிருப்பாளர்கள் ஜெலாஜா கித்தா சிலாங்கூர் ஐடில்ஃபித்ரி நிகழ்வில் கலந்த கொண்டனர். வானிலை பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்ள ஒரு தடையாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இரவு 8 மணி முதல் 11 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மற்றும் அவரது மனைவி டத்தின்ஸ்ரீ மஸ்தியானா முஹமட் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அவர்களின் வருகையை மாநில அரசு செயலாளர் டத்தோ ஹாரிஸ் காசிம் மற்றும் உலு சிலாங்கூர் மாநகராட்சியின் தலைவர் முகமட் ஹஸ்ரி நோர் முகமட் ஆகியோர் வரவேற்றனர்.

அமிருடினும் அவரது மனைவியும் 30க்கும் மேற்பட்ட கடைகளைப் பார்வையிட்டனர். மேலும், 500 குழந்தைகளுக்கு டுயட் ராயாவை வழங்கியதுடன், அவருடன் புகைப்படம் எடுக்க விரும்பும் வருகையாளர்களின் கோரிக்கைகளையும் அவர் நிறைவேற்றினார்.

ஐந்துக்கும் மேற்பட்ட பிரபலமான பாடல்களைப் பாடிய பிரபல பாடகர்களான இமான் ட்ராய் மற்றும் ஜே ஜே ஆகியோரின் நிகழ்ச்சியும் வருகையாளர்களை மகிழ்வித்தது.


Pengarang :