SELANGOR

இன்று இரவு பாங்கி நாடாளுமன்றத்தின் ‘பிக்னிக் ராயா” நிகழ்ச்சி ஏற்பாடு

ஷா ஆலம், ஏப்ரல் 30: இன்று இரவு பண்டார் பாரு பாங்கியில் உள்ள காஜாங் நகராட்சி (MPKj) செக்‌ஷன் 15 விளையாட்டு வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாங்கி நாடாளுமன்றத்தின் ‘பிக்னிக் ராயா’ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பாங்கி குடிமக்கள் அழைக்கப்படுகிறார்கள்.

இந்நிகழ்வு இன்று இரவு 8 மணி முதல் 11 மணி வரை நடைபெறவுள்ளதாகப் பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் சயரெட்சன் ஜோஹான் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் ராயா விருந்து மற்றும் பல்வேறு சுவாரஸ்யமான நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

“மேலும், வருகையாளர்கள் சொந்த பாய்கள் அல்லது நாற்காலிகள் கொண்டு வர ஊக்குவிக்கப்படுகிறார்கள்,” என்று அவர் முகநூல் மூலம் தெரிவித்தார்.

இன்று இரவு, ஜெலாஜா கித்தா சிலாங்கூர் ஐடில்பித்ரி நிகழ்வும் மாநில அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வு பாடாங் தாமான் ஸ்ரீ கெராயோங், கபார், கிள்ளானில் நடைபெறவுள்ளது.

இதில் சிலாங்கூர் சுல்தான் மாண்புமிகு சுல்தான் ஷராவுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் அவர்களும் கலந்து கொள்ளவுள்ளார்.


Pengarang :