SELANGOR

ஜெலாஜா கித்தா சிலாங்கூர் ஐடில்பித்ரி வீடியோ போட்டியின் இரண்டு வெற்றியாளர்களுக்கு SM ஸ்போர்ட் 110 மோட்டார் சைக்கிள் பரிசு

ஷா ஆலம், ஏப்ரல் 30: ஜெலாஜா கித்தா சிலாங்கூர் ஐடில்பித்ரி வீடியோ போட்டியில் வெற்றி பெறுவர்களுக்கு இரண்டு SM ஸ்போர்ட் 110 மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படும்.

இப்போட்டியில் பங்கேற்க விரும்புவர்கள் ஏதாவது ஓர் இடத்தில் நடைபெறும் சிலாங்கூர் ஐடில்பித்ரி திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்டு 60 வினாடிகளுக்குள் வீடியோ ஒன்றை உருவாக்க வேண்டும்.

இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்து @gayatravel, @aksesmalaysia மற்றும் @mediaselangor என டேக் செய்ய வேண்டும் என்று மாநிலச் செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

“#KitaSelangor, #KitaSelangorAidilfitri, #MalaysiaMadani, #GayaTravel, #MediaSelangor, #AksesMalaysia, #PMNS, #SUKSelangor, #TeamRayaSelangor மற்றும் #Selangor என்ற அடையாளங்களைச் சேர்க்க மறக்காதீர்கள்.

“இரண்டு மோட்டார் சைக்கிள்களை வெல்ல இரண்டு மிகவும் ஆக்கப்பூர்வமான மற்றும் சுவாரஸ்யமான வீடியோக்கள் தேர்ந்தெடுக்கப்படும்,” என்று அவர் முகநூலில் தெரிவித்தார்.


Pengarang :