SELANGOR

167 கிலோ மின் மற்றும் மின்னணு கழிவுகள் (இ-வேஸ்ட்) வெற்றிகரமாக சேகரிக்கப்பட்டன – அம்பாங் ஜெயா

ஷா ஆலம், மே 2: அம்பாங் ஜெயா நகராட்சியில் மொத்தம் 167 கிலோ மின் மற்றும் மின்னணு கழிவுகள் (இ-வேஸ்ட்) வெற்றிகரமாக சேகரிக்கப்பட்டன.

ஏப்ரல் 29 ஆம் தேதி தாமான் நிர்வாண அம்பாங் முஹிப்பா வளாகத்தில் அம்பாங் ஜெயா மாநகராட்சி சுற்றுச்சூழல் சுகாதாரத் துறையால் மின்-கழிவு சேகரிப்புத் திட்டத்தை முன்னிட்டு இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப் பட்டது என்று உள்ளூர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

“இ-வேஸ்ட் என்பது மின் மற்றும் மின்னணு பொருட்கள் சேதமடைந்து, வேலை செய்யாத, பழைய அல்லது காலாவதியான பொருட்கள் ஆகும். மின் கழிவுகள் மறுசுழற்சி செய்யப் படுவதன் மூலம் பூமிபாதுகாக்கப் படுகிறது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பொறுப்பை அனைவரும் ஏற்றுக் கொள்வோம்” என்று முகநூலில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு, அம்பாங் ஜெயா மாநகராட்சி சுற்றுச்சூழல் தினப் போட்டியின் மூலம் 12 டன் மின்னணுக் கழிவுகளை சேகரித்தது. இதில் ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளி மாணவர்கள் உட்பட 47 சமூகங்கள் ஏப்ரல் முதல் டிசம்பர் வரை பங்கேற்றன.


Pengarang :