NATIONAL

எண்ணெய்க் கப்பலில் தீ- மூன்று பணியாளர்களைக் காணவில்லை

கோத்தா திங்கி, மே 2- ஆப்பிரிக்காவின் கேபோனில் பதிவு செய்யப்பட்ட
எண்ணெய்க் கப்பல் இங்குள்ள தஞ்சோங் செடிலியின் வடகிழக்கே 37.5வது
கடல் மைல் தொலைவில் நேற்று தீப்படித்தது. இச்சம்பவத்தில் அந்த
கப்பலில் இருந்த மூன்று பணியாளர்கள் காணாமல் போனதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் ஜொகூர் பாரு கடல் துணை மீட்பு மையம் நேற்று
மாலை 4.00 மணியளவில் அவசர அழைப்பைப் பெற்றதாக கடல்சார்
அமலாக்க நிறுவனத்தின் ஜொகூர் மாநில முதலாவது அட்மிரல் நுருள்
ஹிஷாம் ஜக்காரியா கூறினார்.

அந்தக் கப்பல் 28 பணியாளர்களுடன் சீனாவிலிருந்து சிங்கப்பூர் நோக்கிச்
சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக அவர் சொன்னார்.

இத்தீவிபத்து தொடர்பில் தகவல் கிடைத்தவுடன் மீட்புப் பணிகள்
விரைவுபடுத்தப்பட்டு மீட்புப் படகொன்று சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டு
இரு கடலோடிகள் மீட்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அந்த கப்பலில் இருந்த மேலும் 23 பேரை அருகில் இருந்த இரு கப்பல்கள்
காப்பாற்றிய வேளையில மேலும் மூவர் காணப்படவில்லை என
அறிவிக்கப்பட்டுள்ளது என நேற்றிரவு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டார்.

விபத்தில் சிக்கிய கப்பலின் பணியாளர்கள் குறித்த விபரங்கள்
சேகரிக்கப்பட்டு வரும் வேளையில் இந்த விபத்துக்கான காரணத்தைக்
கண்டறியும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் அவர்.


Pengarang :