NATIONAL

சிறு, அங்காடி வியாபாரிகளின் மேம்பாட்டிற்கான ஐந்தாண்டு திட்டம்- மாநில அரசு தாக்கல்

ஷா ஆலம், மே 2- தொழில் முனைவோர் மேம்பாட்டை இலக்காக
கொண்ட ஐந்தாண்டுச் செயல் திட்டத்தை மாநில அரசு விரைவில் தாக்கல்
செய்யவுள்ளது.

அங்காடி வியாபாரிகள் மற்றும் சிறு வணிகர்களின் நிலையை
உயர்த்துவதை நோக்கமாக கொண்ட இந்த திட்டம் தமக்கு பிறகு
தொழில்முனைவோர் மேம்பாட்டுத்து துறைக்கு பொறுப்பேற்கும்
ஆட்சிக்குழு உறுப்பினருக்கு ஒரு வழிகாட்டியாக விளங்கும் என்று
ரோட்சியா இஸ்மாயில் சொன்னார்.

இந்த செயல்திட்டத்தை நாங்கள் விரைவில் மாநில அரசிடம்
சமர்ப்பிக்கவுள்ளோம். எனது ஆட்சிக்குழு உறுப்பினர் பதவி முடிவுக்கு
வந்தப் பின்னர் இப்பொறுப்பை புதிதாக ஏற்கும் ஆட்சிக்குழு உறுப்பினருக்கு
இந்த புளுப்பிரிண்ட் எனப்படும் செயல்திட்டம் பெரிதும் உதவியாக
இருக்கும் என அவர் கூறினார்.

இப்போது நான்தான் இந்த பொறுப்பினை வகித்து வருகிறேன். இதன் வழி
மாநிலத்திலுள்ள தொழில்முனைவோரை மேம்படுத்தும் பணியை நான்
சுலபமாக மேற்கொள்ள இயலும் என்று அவர் தெரிவித்தார்.

தாம் ஆட்சிக்குழு உறுப்பினராக பதவி வகித்த போது ஊராட்சி மன்ற
நிலையில் சிறப்பு தொழில்முனைவோர் மேம்பாட்டு செயல்குழுவை
உருவாக்குவதில் அடைந்த வெற்றியை அவர் பகிர்ந்து கொண்டார்.

இந்த சிறப்பு செயல்குழுவை அமைத்ததன் வாயிலாக சிறு வணிகர்கள்
மற்றும் அங்காடி வியாபாரிகள் சம்பந்தப்பட்ட விவகாரங்களைக்
கையாள்வதில் நாம் ஊராட்சி மன்றங்களுடன் அணுக்கமாக
செயல்படுவதற்குரிய வாய்ப்பு ஏற்பட்டது என்றார் அவர்.

சிலாங்கூர் தொழில் முனைவோரின் உழைப்பில் உருவான 300க்கும்
மேற்பட்ட பொருள்கள் வெளிநாட்டுச் சந்தைகளிலும் ஊடுருவியது குறித்து
நாங்கள் பெருமிதம் கொள்கிறோம் என அவல் மேலும் குறிப்பிட்டார்.


Pengarang :