NATIONAL

தாதி ஒருவர் சந்தேக நபரால் RM134,000 ஏமாற்றப் பட்டுள்ளார்

மூவார், மே 2: தாதி ஒருவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்த நபர் ஒருவரால் ஒரு வாரத்திற்கு முன்பு RM134,000 ஏமாற்றப் பட்டுள்ளார்.

40 வயதான அந்த தாதி இந்தோனேசியர் என கருதப்படும் சந்தேக நபரை சமூக ஊடகமான முகநூல் மூலம் சந்தித்துள்ளார். மேலும் அவர்கள் அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளனர்.

மூவார் மாவட்டக் காவல்துறை தலைமை உதவி ஆணையர் ரைஸ் முக்லிஸ் அஸ்மான் அசிஸ் கூறுகையில், சந்தேக நபர் பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்துள்ளார்.

ஒருவரை ஒருவர் அறிந்த பிறகு, சந்தேக நபர் பாதிக்கப்பட்டவரிடம், அவரது தாயார் நோய்வாய்ப்பட்டு உள்ளார், அதனால், இந்தோனேசியாவுக்குச் செல்ல விமான டிக்கெட் வாங்குவதற்கு கொஞ்சம் பணத்தை கடனாக கேட்டுள்ளார்.

“சந்தேக நபர் மலேசியா திரும்பிய பிறகு கடனாகப் பெற்ற பணத்தைத் திருப்பித் தருவதாக உறுதியளித்தார். அந்த நம்பிக்கையின் அடிப்படையில், பாதிக்கப்பட்டவர் RM300 கடன் கொடுத்தார்.

“அதன் பின்னர், சந்தேக நபர் மலேசியாவுக்குத் திரும்பிய பின்னர் பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தார், மேலும் திருமண விழா உள்ளிட்ட செலவுகளுக்காக RM134,000 அனுப்புவதாக அந்நபர் தெரிவித்துள்ளார்” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

“பாதிக்கப்பட்டவர் ஒரே வங்கிக் கணக்குக்கு RM8,820 மொத்தம் ஏழு பரிவர்த்தனைகளைச் செய்துள்ளார். பணம் செலுத்திய பிறகு, பாதிக்கப்பட்டவர் வங்கிக் கணக்கைச் சரிபார்த்த போது உறுதியளித்தபடி ரிம134,000 டெபாசிட் செய்யப்படவில்லை என்பதைக் கண்டறிந்தார். பின் அவர் இச்சம்பவம் தொடர்பாகக் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

எனவே, மோசடி செய்பவர்களிடமிருந்து பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு காவல்துறை அறிவுறுத்துகிறது,” என்று அவர் கூறினார்.


Pengarang :