NATIONAL

நான்கு மூத்த அதிகாரிகள் மாநில அரசு பணிகளுக்கு நியமனம்

ஷா ஆலம், மே 2 -  நான்கு மூத்த அரசு அதிகாரிகள் மாநில அரசின் பல்வேறு 
பதவிகளுக்கு  நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாநில அரசு தலைமைச் செயலகக் கட்டிடத்தில் இன்று  நடைபெற்ற இந்த நியமனக் 
கடிதம் வழங்கும் விழாவுக்கு சிலாங்கூர் மாநிலச் செயலாளர் டத்தோ ஹாரிஸ் காசிம் 
தலைமை தாங்கினார்.

முன்னாள் பெட்டாலிங் மாவட்ட அதிகாரி முகமட் ஜுஸ்னி ஹஷிம்  உலு லங்காட் 
மாவட்ட அதிகாரியாக நியமனம் பெற்றுள்ளார். முன்னாள் கோல சிலாங்கூர் 
நகராண்மைக் கழகத் தலைவர் ரஹிலா ரஹ்மட் முகமட் ஜுஸ்னியின்  பதவியை 
ஏற்றுள்ளார்.

மேலும் அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் முன்னாள் தலைவர் ஃபௌசி 
முகமது யாதிம் சுபாங் ஜெயா மாநகர் மன்றத்தின் புதிய டத்தோ பண்டாராகவும் அனி அகமது புதிய அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத் தலைவராகவும் நியமனம் பெற்றுள்ளனர்.

Pengarang :