NATIONAL

மனிதவள அமைச்சு, சொக்சோ, சிலாங்கூர் அரசு ஏற்பாட்டில் கிள்ளானில் வேலை வாய்ப்பு கண்காட்சி

புத்ரா ஜெயா, மே 2- சொக்சோ, மனித வள அமைச்சு மற்றும் சிலாங்கூர் மாநில அரசு ஏற்பாட்டில் 2023 வேலை வாய்ப்பு கண்காட்சி வரும் மே மாதம் 6 மற்றும் 7ஆம் 
தேதிகளில் மிகப்பெரிய அளவில் கிள்ளான் டேவான் ஹம்சாம ண்டபத்தில் 
நடைபெறுகிறது.

மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் சிறப்பு வருகை புரிந்து இந்த வேலை வாய்ப்பு 
கண்காட்சியை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைப்பார்.

சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வீ கணபதிராவ் உட்பட பல முக்கிய 
பிரமுகர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள்.

காலை 9.00 முதல் மாலை 5.00 மணி வரை இரு தினங்களுக்கு இந்த வேலை வாய்ப்பு கண்காட்சி நடைபெறுகிறது 

7,000க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் ஒரே கூரையின் கீழ் பல நிறுவனங்களில் 
MYFutureJobs 2023இல் காத்திருக்கின்றன!

கால தாமதமின்றி உடனே நாடுங்கள். www.myfuturejobs.gov.my/careerfair 
அகப்பக்கத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த வேலை வாய்ப்பு கண்காட்சியில் பங்கேற்று தங்களுக்குப் பொருத்தமான 
வேலைகளைத் தேர்வு செய்து கொள்ளலாம் என்று மனிதவள அமைச்சர் வ.சிவகுமார் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்

Pengarang :