NATIONAL

பாடாங் தெராப் (கெடா) மற்றும் ஜெம்போல் (நெகிரி செம்பிலான்) பகுதிகளுக்கு வெப்ப வானிலைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

கோலாலம்பூர், மே 2: மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா), கெடாவில்
உள்ள பாடாங் தெராப் மற்றும் நெகிரி செம்பிலானில் உள்ள ஜெம்போல் பகுதிகளுக்கு
வெப்ப வானிலையின் முதல் நிலைக்கான எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

முகநூலில் பதிவேற்றப்பட்ட வெப்ப வானிலை புதுப்பிப்பு தரவுகளின்படி, அந்த இரண்டு
பகுதிகளிலும் நேற்று பிற்பகல் 4.20 மணி வரை மஞ்சள் நிலை வெப்ப அலை
பதிவாகியுள்ளது.

மஞ்சள் நிலை என்பது குறைந்த பட்சம் மூன்று நாட்களுக்குத் தினசரி அதிகபட்ச
வெப்பநிலை 35 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருப்பதைக் குறிக்கிறது.

இதற்கிடையில், தீபகற்பத்தில் உள்ள பிற பகுதிகள், சபா மற்றும் சரவாக் ஆகிய
இடங்களில் தினசரி அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸுக்கும் குறைவாக (நீல
நிலை) பதிவாகியுள்ளது.

தீபகற்பத்தின் பெரும்பாலான பகுதிகளைத் தாக்கும் வெப்பமான வானிலை நீண்ட காலம்
நீடிக்காது என்றும், பொதுமக்கள் குறிப்பாகக் வெளிப்புறங்களில் வேலை செய்பவர்கள்
அல்லது நடவடிக்கைகளை மேற்கொள்பவர்கள் வெப்பமான காலநிலையில் கவனமாக
இருக்க வேண்டும் என்றும் மெட் மலேசியா தெரிவித்துள்ளது.

– பெர்னாமா


Pengarang :