NATIONAL

ஊடகச் சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிப்பதில் அரசாங்கம் உறுதி

கோலாலம்பூர், மே 2: சமநிலை செயல்முறை தொடர்ந்து செழித்து சிறப்பாகச் செயல்படுவதை உறுதி செய்ய ஊடகங்களின் சுதந்திரம் மற்றும் வெளிப் படைத்தன்மைக்கு உத்தரவாதம் அளிக்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

எல்லைகளற்ற நிருபர்கள் (RSF) இன்று வெளியிட்ட உலக ஊடக சுதந்திர குறியீடு 2022இல் மலேசியாவின் நிலைப்பாடு குறித்து ட்விட்டரில் ஒரு ட்வீட் மூலம் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மலேசியாவின் நிலை 51.55 புள்ளிகளுடன் 113 இல் உள்ளது. இது முந்தைய ஆண்டில் 119 இடத்தில் (60.53 புள்ளிகள்) நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆசியா அளவிலும் மலேசியா உயர்ந்த இடத்தில் உள்ளது. தாய்லாந்து (115), இந்தோனேசியா (117), சிங்கப்பூர் (139), கம்போடியா (142), புருணை (144), பிலிப்பைன்ஸ் (147), லாவோஸ் (161), வியட்நாம் (174) மற்றும் மியான்மர் (176) ஆகிய இடங்களில் உள்ளன.

– பெர்னாமா


Pengarang :