SELANGOR

மாநிலத்தின் ஒன்பது இடங்களில் இன்று மலிவு விற்பனை

ஷா ஆலம், மே 3- சந்தையை விட குறைவான விலையில் அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் ஜெலாஜா ஏசான் ராக்யாட் மலிவு விற்பனை இன்று மேலும் ஒன்பது இடங்களில் நடைபெறுகிறது.

மாநில அரசின் ஏற்பாட்டிலான இந்த மலிவு விற்பனை காலை 10.00 தொடங்கி பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறும்.

சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் வாயிலாக மேற்கொள்ளப்படும் இந்த விற்பனை ஜெராம், ஆலயம் ஜெயா பாசார் மாலாம் பகுதி, தாமான்  டெம்பளர் தொகுதியிலுள்ள ஜாலான் 11, செலாயாங் பாரு, பலாக்கோங் தொகுதியின் சிஎஸ் துன் பேராக், உலு கிளாங் தொகுதியின் பெரேம்பாங் இண்டா அடுக்குமாடி குடியிருப்பு ஆகிய பகுதிகளில் நடைபெறுகிறது.

மேலும், சுங்கை காண்டீஸ் தொகுதி நிலையிலான மலிவு விற்பனை புக்கிட் நாகா பள்ளிவாசலிலும் உலு பெர்ணம் தொகுதி நிலையிலான விற்பனை டத்தாரான் கெசிர் தெங்காவிலும் சுங்கை ரமால் தொகுதி நிலையிலான விற்பனை செக்சன் 16 பகுதியிலும் பண்டார் பாரு கிள்ளான் தொகுதி நிலையிலான விற்பனை தாமான் ஸ்ரீ பெக்கானிலும் மேரு தொகுதி நிலையிலான விற்பனை சூராவ் ஹாஜி அலியாசிலும் நடைபெறும்.

இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும் ஒரு தட்டு பி கிரேட் முட்டை 10.00 வெள்ளிக்கும் ஒரு பாக்கெட் இறைச்சி 10.00 வெள்ளிக்கும் ஒரு பாக்கெட் கெம்போங் மீன் 6.00 வெள்ளிக்கும் 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி 10.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

கடந்தாண்டு நவம்பர் முதல் டிசம்பர் வரை மூன்று மாதங்களுக்கு நடத்தப்பட்ட இந்த மலிவு விற்பனையின் மூலம் மாநிலத்திலுள்ள 20  லட்சம் பேர் பயனடைந்தனர்.


Pengarang :