NATIONAL

குப்பைக் கிடங்கில் ஒரு பெண் குழந்தை கண்டெடுக்கப்பட்டது

கோலாலம்பூர், மே 3: பெட்டாலிங் ஜெயா, கம்போங் சுங்கை ஆரா வில் உள்ள குப்பைக் கிடங்கில், தொப்புள் கொடியோடு ஒரு பெண் குழந்தை கண்டெடுக்கப்பட்டது.

பெட்டாலிங் ஜெயா மாவட்டக் காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமட் ஃபக்ருதீன் அப்துல் ஹமீத் கூறுகையில், டாமன்சாரா காவல் நிலையத்தில் புகார் அளித்த ஒரு பெண்ணும்  அவர் மகனும், தாங்கள் காலை 7.15 மணியளவில்  அக்குழந்தையைக் கண்டு எடுத்ததாக புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.

2.5 கிலோகிராம் மற்றும் 49 சென்டிமீட்டர் உயரம் கொண்ட அந்த பெண் குழந்தை, சிறுநீர் கழிப்புடன் மஞ்சள் துணியால் சுற்றப்பட்ட நிலையில் காணப்பட்டதாகவும், மேல் சிகிச்சைக்காகச் சுங்கை பூலோ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘டாக்டரின் பரிசோதனை முடிவுகளில் குழந்தையின் உடல்நிலை சீராக இருப்பது தெரியவந்துள்ளது.

குழந்தை சுங்கை பூலோ மருத்துவமனையில் குழந்தைகள் வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், குற்றவியல் சட்டத்தின் 317வது பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப் பட்டதாகவும் முகமட் ஃபக்ருதீன் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :