NATIONAL

உலு லங்காட்டில் வெள்ளியன்று நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பு- பொதுமக்கள் பங்கேற்க மந்திரி புசார் அழைப்பு

ஷா ஆலம், மே 3- வரும் வெள்ளியன்று நடைபெறும் உலு லங்காட்
மாவட்ட நிலையிலான நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில் கலந்து
சிறப்பிக்கும்படி வட்டார மக்களை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின்
ஷாரி கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த உபசரிப்பு உலு லங்காட், தாமான் ஸ்ரீ நண்டிங் அகோரா இரவுச்
சந்தை வளாகத்தில் நடைபெறும் என்று அவர் சொன்னார்.

தாமான் ஸ்ரீ நண்டிங், அகோரா இரவுச் சந்தை வளாகத்தில் இரவு 8.00 மணி
தொடங்கி நடைபெறவிருக்கும் ஜெலாஜா கித்தா சிலாங்கூர் அய்டிபித்ரி
பொது உபசரிப்பில் கலந்து கொள்ளும்படி உலு லங்காட் வட்டார மக்களை
கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் கூறினார்.

இந்த பெருநாள் உபசரிப்புக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக
அனைவரும் தங்கள் குடும்பத்தாருடன் இந்நிகழ்வில் கலந்து கொள்ளும்படி
கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து ஒன்பது மாவட்டங்களையும் உள்ளடக்கிய இந்த நோன்புப்
பெருநாள் பொது உபசரிப்பு கடந்த வெள்ளிக்கிழமை சிப்பாங் மாவட்டத்தில
தொடங்கியது. இந்நிகழ்வில் சுமார் 10,000 பேர் கலந்து சிறப்பித்தனர்.

அதனைத் தொடர்ந்து கடந்த வார இறுதியில் உலு சிலாங்கூர் மற்றும்
கிள்ளான் ஆகிய மாவட்டங்களில் இந்த பொது உபசரிப்பு நடத்தப்பட்டது.
இந்த உபசரிப்பு நிகழ்வு மே 14ஆம் தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படும்.

எதிர்வரும் மே 14ஆம் தேதி கோம்பாக், ஆப்டவுன் ஸ்ரீ கோம்பாக்கில்
நடைபெறும் இதன் முத்தாய்ப்பு நிகழ்வில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்
இப்ராஹிம் கலந்து கொள்வார்.


Pengarang :