NATIONAL

12 வயது சிறுவன் வெப்பத் தாக்கத்தால் மரணம் – ஜொகூர் சுகாதாரத் துறை மறுப்பு

ஜொகூர் பாரு, மே 3: குளுவாங்கில் நேற்று 12 வயது சிறுவன் இறந்தது வெப்பத் தாக்கத்தால் ஏற்படவில்லை.

ஜொகூர் சுகாதார இயக்குநர் டாக்டர் மொஹ்தார் புங்குட் @ அஹ்மத் கூறுகையில், அச்சிறுவனின் இறப்புக்கான காரணம் மெனிங்கோ என்செபாலிட்டிஸுக்கின் இரண்டாம் நிலை செப்டிக் ஷாக் (செப்டிக் ஷாக் இரண்டாம் மெனிங்கோ என்செபாலிடிஸ்) என்று உறுதி செய்யப்பட்டது.

குளுவாங்கில் உள்ள என்சே பெசார் ஹஜ்ஜா கல்சோம் மருத்துவமனையில் நடத்தப்பட்ட விசாரணையில், அச்சிறுவனுக்கு முந்தைய நாள் அதிக காய்ச்சலுக்குப் பிறகு வலிப்பு ஏற்பட்டதாலும், மூன்று நாட்களுக்கு இருமல் இருந்ததாலும் குழந்தை வார்டில் அனுமதிக்கப் பட்டதாகக் கண்டறியப்பட்டது. ,” என்று அவர் ஜொகூர் மாநிலச் சுகாதாரத் துறையின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் ஓர் அறிக்கை மூலம் தெரிவித்தார்.

அச்சிறுவனின் குடும்பத்தினருக்கு ஜேகேஎன்ஜே தனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும், பொது மக்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடிய செய்திகளை வெளியிடாமல் இருக்க அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பைக் கோருவதாகவும் அவர் கூறினார்.

நேற்று காலை 7 மணியளவில் தனது மகன் உஷ்ண தாக்கத்தினால் உயிரிழந்ததாகக் குழந்தையின் தந்தை கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

– பெர்னாமா


Pengarang :