NATIONAL

டிங்கி சம்பவங்களின் எண்ணிக்கை கடந்த 5.4 விழுக்காடு வாரம் குறைந்தது

கோலாலம்பூர், மே 3- இவ்வாண்டு ஏப்ரல் 22 முதல் 29 வரையிலான
17வது நோய்த் தொற்று வாரத்தில் டிங்கி காய்ச்சல் சம்பவங்களின்
எண்ணிக்கை 5.4 விழுக்காடு குறைந்துள்ளது.

இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை முந்தைய வாரத்தில்
1,877 ஆக இருந்த வேளையில் கடந்த வாரம் 102 சம்பவங்கள் குறைந்து
1,775ஆக ஆகியுள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டத்தோ
டாக்டர் முகமது ராட்ஸி அபு ஹசான் கூறினார்.

கடந்த நோய்த் தொற்று வாரத்தில் டிங்கி காய்ச்சல் சம்பந்தப்பட்ட மரணச்
சம்பவம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று அவர் சொன்னார்.

இதுவரை ஒட்டுமொத்த டிங்கி சம்பவங்களின் எண்ணிக்கை 36,997 ஆகப்
பதிவாகியுள்ளது. எனினும், கடந்தாண்டு இதே காலக்கட்டத்தில் 12,941
சம்பங்கள் மட்டுமே பதிவாகியிருந்தன. 185.9 விழுக்காடு அல்லது 24,056
சம்பவங்களின் அதிகரிப்பை இது காட்டுகிறது என அவர் குறிப்பிட்டார்.

கடந்த 17வது நோய்த் தொற்று வாரத்தில் 103 நோய்ப் பரவல் மையங்கள்
அடையாளம் காணப்பட்ட வேளையில் அதற்கு முந்தைய வாரத்தில் இந்த
எண்ணிக்கை 116ஆக மட்டுமே இருந்ததாக அவர் தெரிவித்தார்.

அவற்றில் 58 இடங்கள் சிலாங்கூரிலும் 25 இடங்கள் பினாங்கிலும் ஏழு
இடங்கள் சபாவிலும் கோலாலம்பூர் மற்றும் பினாங்கில் ஆறு இடங்களும்
பேராக்கில் ஐந்து இடங்களும் கெடா மற்றும் சரவா மாநிலத்தில் தலா ஒரு
இடமும் அடையாளம் காணப்பட்டன என்றார் அவர்.

இதனிடையே, 17வது நோய்த் தொற்று வாரத்தில் நான்கு சிக்கின்குன்யா
நோய்ச் சம்பவங்கள் அடையாளம் காணப்படத் தகவலையும் அவர்
வெளியிட்டார். அவற்றில் இரண்டு சிலாங்கூரில் அடையாளம் காணப்பட்ட
வேளையில் கெடா மற்றும் பேராக்கில் தலா ஒரு சம்பவம் அடையாளம்
காணப்பட்டது என்றார்.


Pengarang :