SELANGOR

கோம்பாக்கின் ஜெலாஜா கித்தா சிலாங்கூர் ஐடில்பித்ரிக்கு 20,000க்கும் மேற்பட்ட வருகையாளர்கள்

கோலா லங்காட், மே 8: மே 14 அன்று கோம்பாக் மாவட்டத்தில் நடைபெறும் ஜெலாஜா கித்தா சிலாங்கூர் ஐடில்பித்ரி (ஜேகேஎஸ்ஏ) திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சிக்கு 20,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காலை ஐடில்பித்ரி ரெவாங்குடன் இந் நிகழ்ச்சி தொடங்கி பிறகு மாலையில் ஐடில்பித்ரி விருந்து நடைபெறும் எனக் கலாச்சார மற்றும் பாரம்பரிய எஸ்கோ தெரிவித்துள்ளார்..

“20,000க்கும் அதிகமானோர் இந்நிகழ்வில் கலந்து கொள்வார்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்,” என்று போர்ஹான் அமன் ஷா, நேற்று இரவு தாமான் பெர்விரா சிஜாங்காங்கில் நடைபெற்ற ஜெலாஜா கித்தா சிலாங்கூர் ஐடில் பித்ரி நிகழ்வில் சந்தித்தபோது கூறினார்.

கோலா லங்காட் மாவட்டத்தின் ஜேகேஎஸ்ஏ சுமார் 10,000 குடியிருப்பாளர்களின் வருகையால் சிறப்பாக நடைபெற்றது. அவர்களுக்கு லெமாங், ரெண்டாங், புன்தென் (ஜாவானியர்களின் பாரம்பரிய உணவு), ஆடு, பெச்சல், அப்பம் பாலிக் மற்றும் ஆயர் பாலாங் போன்ற பல்வேறு வகையான பாரம்பரிய உணவுகள் பரிமாறப்பட்டன.

டத்தாரன் தனாஹ் லெசன், பாரிட் பாரு, சபாக் பெர்னாம் (மே 12) மற்றும் புக்கிட் பாடோங் பொது திடல், கோலா சிலாங்கூர் (மே 13) ஆகிய இடங்களில் ஜெலாஜா கித்தா சிலாங்கூர் ஐடில்பித்ரி நிகழ்வு தொடரும்.

மே 14 அன்று கோம்பாக்கின் அப்டவுன் ஸ்ரீ கோம்பாக் தளத்தில் இந்நிகழ்வு முடிவடையும். இதில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்து கொள்ள உள்ளார்.


Pengarang :