NATIONAL

மலேசியப் பூப்பந்து அகாடமியின் (ஏபிஎம்) தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த மிஷசெல் சாய் ராஜினாமா

கோலாலம்பூர், மே10: மலேசியப் பூப்பந்து அகாடமியின் (ஏபிஎம்) தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த மிஷசெல் சாய் தானாக முன்வந்து ராஜினாமா நோட்டீஸ் அனுப்பியதாக மலேசியப் பூப்பந்து சங்கம் (பிஏஎம்) உறுதி செய்துள்ளது.

விளையாட்டின் நிர்வாக குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கையின் மூலம், மிஷசெல் எடுத்த முடிவுக்கு, நேற்று புனோம் பென்னில் நடந்த கம்போடிய சீ விளையாட்டுப் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட தேசிய மகளிர் அணியின் மந்தமான செயல்பாடுதான் காரணமாக இருக்கக்கூடும்.

“ஏபிஎம் உயர் செயல்திறன் இயக்குனர் டாக்டர் திமோதி ஜான் ஜோன்ஸ் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அவரது பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என்பதை ஏபிஎம் அறிவிக்க விரும்புகிறது” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிஷசெல் தனது பதவியை ராஜினாமா செய்வதோடு கூடுதலாக மகளிர் அணி குழு காட்டிய செயல்திறனுக்கு பொறுப்பேற்பதாக ஒப்புக்கொண்டார்.

நேஷனல் ஸ்டேடியத்தில் மொரோடோக் தெக்கோ பூப்பந்து அரங்கில் நடந்த காலிறுதிப் போட்டியில் பிலிப்பைன்ஸ் மகளிர் அணியிடம் திடீரென 0-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றும் இதற்கு ஏபிஎம் நிர்வாகம் மற்றும் பயிற்சி தரப்பிலிருந்து தீர்வு தேவை என்றும் மிஷசெல் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :