ANTARABANGSA

பாலியல், அதிகாரத் துஷ்பிரயோக வழக்கில் ட்ரம்ப் குற்றவாளி எனத் தீர்ப்பு- 50 லட்சம் டாலர் வழங்க உத்தரவு

நியுயார்க், மே 10- அமெரிக்க சஞ்சிகை ஒன்றின் முன்னாள் நிருபருக்குப்
பாலியல் துன்புறுத்தல் கொடுத்தது மற்றும் அவருக்கு எதிராக அவதூறு
பரப்பியது ஆகிய குற்றச்சாட்டுகளில் முன்னாள் அமெரிக்க அதிபர்
டோனால்டு ட்டிரம்ப் குற்றவாளி என நியுயார்க் ஜூரிகள் தீர்ப்பளித்தனர்.

பாதிக்கப்பட்ட இ. ஜீன் கேரல் எனும் அந்த பெண்ணுக்கு 50 லட்சம்
அமெரிக்க டாலரை (2.2 கோடி வெள்ளி) அந்த முன்னாள் அதிபர்
இழப்பீடாக வழங்க வேண்டும் என ஜூரிகள் உத்தவிட்டனர். எனினும்,
அப்பெண் கற்பழிக்கப்பட்டதாக கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டை ஒன்பது
பேரங்டங்கிய ஜூரிகள் குழு தள்ளுபடி செய்தது.

இந்த தீர்ப்பை உடனடியாக நிராகரித்த டோனால்ட் ட்டிம்ப், இது
வெட்கக்கேடானது என வர்ணித்தார்.

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பல பாலியல் குற்றச்சாட்டுகளை
எதிர்நோக்கி வந்த ட்டிரம்பிற்கு சட்ட ரீதியாக கிடைத்த முதலாவது
தண்டனையாக இது விளங்குகிறது.

கடந்த 1996ஆம் ஆண்டு மேன்ஹாத்தன் நகரில் உள்ள ஆடம்பர ஆடை
விற்பனை மையத்தின் உடை மாற்றும் அரையில் ட்ரம்ப் தனக்கு எதிராக
பாலியல் வன்புணர்வு புரிந்ததாக 79 வயதான கேரல் புகார்
அளித்திருந்தார்.

தனக்கு எதிரான தாக்குதலை கடந்த 2019ஆம் ஆண்டு தாம்
அம்பலப்படுத்திய போது “நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட ஏமாற்று
வேலை“ என தனக்கு எதிராக ட்ரம்ப் அவதூறு பரப்பியதாக எல்லி எனும்
சஞ்சிகையின் முன்னாள் கட்டுரையாளரான கேரல்
குற்றஞ்சாட்டியிருந்தார்.


Pengarang :