SELANGOR

சபாக் பெர்ணம் மாவட்டதில் வெள்ளியன்று நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பு- பொதுமக்கள் பங்கேற்க மந்திரி புசார் அழைப்பு

ஷா ஆலம், மே 10- சபாக் பெர்ணம் மாவட்ட நிலையிலான சிலாங்கூர்
அரசின் நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பு வரும் வெள்ளிக்கிழமை
நடைபெறவுள்ளது.

இந்த ஜெலஜா ஏசான் ராக்யாட் ஐடில்பித்ரி பொது உபசரிப்பு தானா
லேசேன் பாரிட் பாருவில் இரவு 8.00 மணி முதல் 11.00 மணி வரை
நடைபெறும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இந்த பொது உபசரிப்பில் குடும்பத்தினருடன் கலந்து சிறப்பிக்குமாறு
வட்டார மக்களை கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் தனது பேஸ்புக்
பதிவில் தெரிவித்தார்.

இந்த பொது உபசரிப்பில் விருந்து நிகழ்வோடு பிரசித்தி பெற்ற
கலைஞர்களான எஸாட் லாஸிம் மற்றும் லான் சோலோ ஆகியோரின்
கலைப்படைப்புகளும் இடம் பெறும் என அவர் தெரிவித்தார்.

இந்த பொது உபசரிப்பு நிகழ்வில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 37 உணவு
மையங்களில் சாத்தே, வாட்டிய ஆட்டிறைச்சி, லெமாங், ரெண்டாங்,
பாரம்பரிய பலகாரங்கள், சூப் உள்ளிட்ட உணவுகளை ருசிப்பதற்குரிய
வாய்ப்பு வருகையாளர்களுக்குக் கிடைக்கும் என அவர் சொன்னார்.

இந்நிகழ்வில் இடம் பெறும் அதிர்ஷ்டக் குலுக்கில் தேர்வாகும்
அதிர்ஷ்டசாலிகளுக்கு மோட்டார் சைக்கிள் மற்றும் மின்னியல்
பொருள்கள் அன்பளிப்பாக வழங்கப்படும் என்பதோடு கராவேக்கே
உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்போருக்கு ரொக்கப் பரிசுகளும்
வழங்கப்படும் என்றார் அவர்.

நோன்புப் பெருநாளை முன்னிட்டு மாநில அரசு மாநிலத்தில் உள்ள ஒன்பது
மாவட்டங்களிலும் நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பை நடத்தி
வருகிறது.


Pengarang :