NATIONAL

சீ விளையாட்டு போட்டியில் மலேசியாவுக்கு மேலும் ஒரு தங்கத்தை ஈட்டித் தந்தார் ஷெரின் சேம்சன் வல்லபாய்

புனோம் பென், மே 10- கம்போடியாவில்  நடைபெற்று வரும் சீ விளையாட்டு போட்டியில்  மலேசியாவுக்கு  மேலும் ஒரு தங்கத்தை ஈட்டித் தந்தார் 400 மீட்டர் ஓட்ட வீராங்கனை ஷெரின் சேம்சன் வல்லபாய்.

தற்போது அமெரிக்காவில் ஓட்டப் பயிற்சி மேற்கொண்டுவரும் ஷெரின் சேம்சன் நாட்டுக்கு  ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி  வந்தார். அமெரிக்காவில் பயிற்சியின் போது  மலேசியாவின் மகளிர் 400 மீட்டர் ஓட்ட தேசிய சாதனையை முறியடித்த அவர்  இவ்வாண்டு  சீ விளையாட்டு போட்டியில்   தங்கப் பதக்கத்தை வெல்வார் என்ற எதிர்பார்ப்பு  மலேசியர்களிடம்  அதிகம்  இருந்தது .

நேற்று நடந்த போட்டியில்  இரண்டு  வியட்னாமிய போட்டியாளர்களை  வென்று  மலேசியாவுக்கு தங்கம்  வென்று தந்த அவர்.  நீண்ட தூர பயண களைப்பு ,மற்றும் மலேசியர்களின்  குறிப்பாக தனது பெற்றோர்களின்  எதிர்பார்ப்பும் தனக்கு  மிகுந்த  மன அழுத்தத்தை தந்ததாக  குறிப்பிட்டுள்ளார்.

அவரின் தாய் மற்றும்  தந்தை இருவரும்  80 ஆம் ஆண்டுகளில் நாட்டின் முன்னணி ஓட்டப்பந்தய நட்சத்திரங்கள். தந்தை செம்சன்  வல்லபாய். 800 மீட்டர் ஓட்டப்பந்தய வீரராக இருந்த வேளையில்  நாட்டை  பிரதிநிதித்து பல சர்வதேசப் போட்டிகளில் பங்கொடுத்து,  நாட்டிற்கு பதக்கங்களை வென்றுள்ளார், அவரின் தாயார்  ஜோசப்பின் மேரி  நாட்டின் முன்னணி  400 மீட்டர் ஓட்டப்பந்தய வீராங்கனையாக  விளங்கியதுடன், சீ விளையாட்டு  போட்டிகளில்  4 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்  என்பது  குறிப்பிடத்தக்கது.

நேற்றைய போட்டிகளில் தடகள பிரிவில் இரு தங்கப்பதக்கங்கள், நீச்சல் மற்றும் ஸ்னூக்கர் போட்டிகளில் தலா ஒரு தங்கப்பதக்கமும்   மலேசியாவுக்கு கிடைத்தன.

Pengarang :