NATIONAL

சீ போட்டி: வுஷூ விளையாட்டில் தான் சியோங் மின் தங்கப் பதக்கத்தை வென்றார்

புனோம் பென், மே 10: தேசிய வுஷூ விளையாட்டாளர் தான் சியோங் மின் 2023 ஆம் ஆண்டு சீ விளையாட்டு போட்டியில் வுஷூ விளையாட்டில் இன்று தங்கப் பதக்கத்தை வென்றார்.

சீ விளையாட்டில் முதல்முறையாகப் போட்டியிட்ட 2019 உலக சாம்பியனான தான் சியோங் மொத்தம் 9,626 புள்ளிகளைப் பெற்று தங்கத்தை வென்றார்.

9,593 புள்ளிகளுடன் இந்தோனேசிய வீராங்கனை தஸ்யா அயு புஸ்பா தேவி வெள்ளிப் பதக்கத்தையும், 9,143 புள்ளிகளைப் பெற்ற மியான்மர் பிரதிநிதி அயே திட்சர் மைன்ட் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

இன்று லோ யிங் டிங் மற்றும் பாங் புய் யீ ஆகியோருடன் சியோங் மின் மகளிர் டுயிலியன் நிகழ்வின் இறுதிப் போட்டியில் களம் இறங்குவார்.

சியோங் மினின் வெற்றி இன்று சீ விளையாட்டுப் போட்டியில் வென்ற மூன்றாவது தங்கம் மற்றும் தேசியக் குழுவின் 18வது தங்கம் ஆகும்.

– பெர்னாமா


Pengarang :