NATIONAL

இவ்வாண்டு 20,000க்கும் மேற்பட்ட குழந்தைகள்  RM100 சேமிப்பு பலனைப் பெறுவார்கள் – இல்திசம் அனாக் சிலாங்கூர்

ஷா ஆலம், மே 11: இந்த ஆண்டு இல்திசம் அனாக் சிலாங்கூர் (ANAS) திட்டத்தின் மூலம் மாநிலத்தில் 20,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஐந்து வயது வரை வருடத்திற்கு RM100 சேமிப்பு பலனைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நன்கொடை ஆனது கல்விக்குத் தயாராகும் வகையில் ஐந்தாண்டுகளுக்கு தேசிய கல்வி சேமிப்புத் திட்டம் (எஸ்எஸ்பிஎன்) கணக்கில் சேர்க்கப்படும் என்று டத்தோ மந்திரி புசார் கூறினார்.

சிலாங்கூர் பட்ஜெட் 2023ல், RM3 மில்லியனை ஒதுக்கி அனாஸ் திட்டத்தை வெற்றிகரமாக மாற்ற 30,000 குழந்தைகள் RM500 பெறுவது இலக்காக உள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் வரை  சிலாங்கூரில் பிறந்த 7,654 குழந்தைகள் ஐந்து வயது வரை வருடத்திற்கு RM100 சேமிப்பைப் பெற தகுதியுடையவர்கள். இந்த ஆண்டு இறுதி வரை 20,000க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இந்த உதவி வழங்கப்படவுள்ளது.

“நமது குழந்தைகளின் எதிர்கால நலனைப் பாதுகாக்கும் மாநில அரசின் திட்டங்களில் இதுவும் ஒன்று” என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இன்று முகநூல் மூலம் தெரிவித்துள்ளார்.

அமிருடின் மேலும் கூறுகையில், 2022 ஆம் ஆண்டு தொடங்கி மலேசியா குடிமக்கள்,பெற்றோர்களில்  ஒருவர் சிலாங்கூரில் பிறந்து அல்லது குறிப்பிடப்பட்டுள்ள ஆண்டுகளுக்கு மேல் சிலாங்கூரில்  வசிப்பவர்கள் புதிதாக குழந்தையை ஈன்றெடுத்தால்,  பெற்றோர்கள் RM500 அனாஸ் சேமிப்பு உதவிக்கு  anas.yawas.com.my என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மக்கள் நலன் காக்கும் மாநில அரசின் பல்வேறு திட்டங்களில்,  அனாஸ்சும் ஒன்று , புதிதாக குழந்தையை பெற்றவர்கள்  இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று  அவர் கேட்டுக்கொண்டார்.


Pengarang :