NATIONAL

அடிக்கடி தீப்பிடிக்கும் வனப் பகுதிகள் அதிக உஷ்ண காலத்தில்  உன்னிப்பாகக் கண்காணிக்கப்  படுகிறது

கோலா சிலாங்கூர், மே 11: நாட்டில் தற்போது நிலவும் வெப்பம் மற்றும் வறண்ட
காலநிலை காரணமாக அடிக்கடி தீப்பிடிக்கும் வனப் பகுதிகளைச் சிலாங்கூர் மாநில
வனத்துறை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.

அதிக வெப்பமான வானிலை காரணமாக தீ ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகளைக் கண்டறிவதற்கான வழிகாட்டியாக வெப்பப்பகுதி தரவு பகுப்பாய்வு அமைப்பு இருப்பதாக  அதன் இயக்குனர் அசார் அஹ்மட் கூறினார்.

ஹாட் ஸ்பாட் பகுதிகளில் தயார் நிலையில் இருக்குமாறும், மிகவும் தொலைவில் இருக்கும் இடங்களில் ட்ரோன் சேவைகளைப் பயன்படுத்துமாறும் அவர் தனது குழுவுக்கு அறிவுறுத்தினார்.

” நாங்கள் குறிப்பிட்ட பகுதிக்கு ஏற்ப கண்காணிப்பு ரோந்து செய்வோம், ஏதும், தகவல் கிடைத்தால் , அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கபடும்” என்று அவர் ராஜா மூசா வனக் காப்பகத்தில் நடைபெற்ற சுற்றுப்பயண அமர்வின் போது  கூறினார்.

இந்த மாநிலத்தில் உள்ள சதுப்பு நிலக் காடுகளைப் பாதுகாப்பது பற்றிய செய்தியைப் பரப்புவதற்கு, வெளிநாடுகள் உட்பட பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த மொத்தம் 80 பிரதிநிதிகள் இந்த வருகையில் பங்கேற்றனர்.

எல் நினோ ஜூன் முதல் செப்டம்பர் வரை 57 சதவிகிதம் ஏற்பட்டு செப்டம்பர் முதல் நவம்பர் வரை 62 சதவிகிதம் அதிகரிக்கும் என்று மலேசிய வானிலை ஆய்வுத் துறை எதிர்பார்க்கிறது.

பசிபிக் பெருங்கடலின் வெப்பநிலை திடீரென அதிகரித்ததன் விளைவாக இந்த நிகழ்வு ஏற்பட்டது. இதனால் வானிலை வெப்பமாகவும் வறண்டதாகவும் குறைந்த மழைப்பொழிவு கொண்டதாக மாறுகிறது.


Pengarang :