NATIONAL

சீ போட்டியில் மலேசியாவுக்கு 24 தங்கம்- 57 பதக்கங்களுடன் வியட்னாம் முதலிடம்

புனோம் பென், மே 12- இங்கு நடைபெற்று வரும் சீ போட்டியில் நேற்றிரவு
11.00 மணி மலேசிய நேரப்படி மலேசியா 24 தங்கம் 31 வெள்ளி மற்றும் 49
வெண்கலப் பதக்கங்களைப் பெற்று தொடந்து ஏழாவது இடத்தில் இருந்து
வருகிறது.

மொத்தம் 57 தங்கம், 56 வெண்கலம் மற்றும் 70 வெண்கலப் பதக்கங்களுடன்
வியட்னாம் முதலிடத்தை தொடர்ந்து தக்க வைத்துள்ளது. 56 தங்கம், 44
வெள்ளி மற்றும் 55 வெண்கலப் பதக்கங்களுடன் உபசரணை நாடான
கம்போடியா இரண்டாம் இடத்தில் உள்ளது.

மூன்றாவது இடத்தில் உள்ள தாய்லாந்து 54 தங்கம், 39 வெண்கலம்
மற்றும் 58 வெண்கலப் பதக்கங்களை இதுவரைப் பெற்றுள்ளது. நான்காவது
இடத்தில் உள்ள இந்தோனேசியாவுக்கு இதுவரை 42 தங்கம், 34 வெள்ளி
மற்றும் 59 வெண்கலப்பதக்கங்கள் கிடைத்துள்ளன.

மொத்தம் 35 தங்கம், 27 வெள்ளி மற்றும் 33 வெண்கலப் பதக்கங்களுடன்
சிங்கப்பூர் ஐந்தாவது இடத்திலும் 27 தங்கம் 51 வெள்ளி மற்றும் 65
வெண்கலப் பதக்கங்களுடன் பிலிப்பைன்ஸ் ஆறாது இடத்திலும் உள்ளன.

பதினான்கு தங்கப் பதக்கங்களுடன் மியன்மார் எட்டாவது இடத்திலும் 6
தங்கங்களுடன் லாலவோஸ் ஒன்பதாவது இடத்திலும் ஒரு
தங்கப் பதக்கத்துடன் புருணை ஒன்பதாவது இடத்திலும் உள்ள வேளையில்
தீமோர் லெஸ்தேவுக்கு இப்போட்டியில் ஒரு தங்கமும் இன்னும்
கிடைக்கவில்லை.


Pengarang :