NATIONAL

வெப்ப வானிலையில் முதல் எச்சரிக்கை நிலையில் 12 இடங்கள் உள்ளன

ஷா ஆலம், மே 12: இன்று மலேசிய வானிலை ஆய்வுத் துறை (மெட்மலேசியா) வெளியிட்ட வெப்ப வானிலையின் பதிவின் படி எச்சரிக்கை நிலை ஒன்றில் உள்ள 12 இடங்களில் கோல சிலாங்கூரும் ஒன்றாகும்.

மேலும் தீபகற்பத்தில் 11 இடங்கள்  எச்சரிக்கை நிலையில் உள்ளன என்று ஏஜென்சி தகவல் அளித்துள்ளது. அவ்விடங்கள் பாசிர் மாஸ், பாடாங் தெராப், கோலா மூடா, பாலிங், பண்டார் பாரு, உலு பேராக், செலமா, மாத்தங், லாரூட், கிந்தா, மஞ்சோங், பத்தாங் பாடாங் மற்றும் ஜெம்போல் ஆகும்.

“சபாவில் இரண்டு பகுதிகள் (பியூஃபோர்ட், கினாபத்தாங்கன்) மற்றும் சரவாக்கில் ஒரு பகுதியும் (முக்கா)  எச்சரிக்கை நிலை ஒன்றில் உள்ளன,” என்று அவர் கூறினார்.

தினசரி அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸுக்கும் குறைவாக இருந்தால் எச்சரிக்கை நிலை ஒன்று ஆகும். மேலும்,

தினசரி அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்குத் தொடர்ந்தால் அது  முதல் எச்சரிக்கை நிலை ஆகும் என மெட்மலேசியா தெரிவித்துள்ளது.

எச்சரிக்கை நிலை இரண்டில் (உஷ்ண அலை) குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்கு 37 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும்.

மேலும், எச்சரிக்கை நிலை மூன்றில் தினசரி வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் குறைந்தது மூன்று நாட்கள் தொடர்ந்து இருக்கும்.

தினசரி வெப்ப வானிலை குறித்தத் தகவலுக்கு, நீங்கள் https://www.met.gov.my/iklim/status-cuaca-panas/ ஐப் பார்க்கவும்.


Pengarang :