NATIONAL

லண்டன் கைவினைப் பொருள் வாரத்திற்கு வருகை புரிந்த முன்னாள் பிரிட்டிஷ் பிரதமருடன் பேரரசியார் சந்திப்பு

கோலாலம்பூர், மே 12- பிரிட்டனில் உள்ள மலேசிய அனைத்துலகப்
பெலிவியனில் நடைபெறும் 2023 லண்டன் கைவினைப் பொருள்
கண்காட்சிக்கு வருகை புரிந்த பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டேவிட்
கெமரூனை மாட்சிமை தங்கிய பேரரசியார் துங்கு அஜிசா அமினா
மைமுனா இஸ்கந்தரியா வரவேற்றார்.

லண்டன், பெல்கிரேவ் சதுக்கத்தில் உள்ள மலேசிய தூதரகத்தில்
நடைபெறும் இந்த கண்காட்சியில் பெர்ஜெயா கார்ப்ரேஷேன் நிறுவனரும்
கார்டிவ் சிட்டி கால்பந்து குழுவின் உரிமையாளருமான டான்ஸ்ரீ
வின்சென்ட் டானும் கலந்து கொண்டார்.

டேவிட் கெமரூன் மற்றும் டான் ஸ்ரீ வின்சென்ட் டான் உள்ளிட்ட
பிரமுகர்களுடன் பேரரசியார் கலந்துரையாடியதாக இஸ்தானா நெகாரா
வெளியிட்ட பேஸ்புக் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கைவினை மற்றும் பாரம்பரிய பொருள் கண்காட்சி .கடந்த
சனிக்கிழமை தொடங்கி இம்மாதம் 14ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

மலேசியர்களின் குறிப்பாக, மலாய்க்காரர்கள், பகாங், செமேலாய்
பூர்வக்குடியினர் மற்றும் சபா, சரவா சிறுபான்மை பூர்வக்குடியினரின்
கலைத் திறனை வெளிப்படுத்தும் நுட்பம் நிறைந்த கலைப்படைப்புகள்
இந்த கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.


Pengarang :