NATIONAL

சீ போட்டியில் தங்கம் வென்ற ஷாமளராணிக்கு ஷா ஆலம் மாநகர் மன்றம் சார்பாகக் கௌரவிப்பு

ஷா ஆலம், மே 12- கம்போடியாவின் புனோம் பென் நகரில் நடைபெறும்
2023ஆம் ஆண்டு சீ போட்டியில் தங்கம் வென்ற கராத்தே வீராங்கனையான
சி. ஷாமளாதேவி ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் சார்பாகக்
கௌரவிக்கப்பட்டார்.

இங்குள்ள தாமான் ஸ்ரீமூடாவைச் சேர்ந்த ஷாமளராணியை ஷா ஆலம்
மாநகர் மன்றத்தின் இந்தியப் பிரதிநிதிகளான வீ.பாப்பா ராய்டு, ராமு
நடராஜன், எம்.முருகையா மற்றும் எஸ்.காந்திமதி ஆகியோர்
ஷாமளராணியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துகளைத்
தெரிவித்துக் கொண்டவதோடு ஷா ஆலம் டத்தோ பண்டார் சார்பாக
நினைவுச் சின்னத்தையும் வழங்கினர்.

மாநகர் மன்ற உறுப்பினர் ராமு தாம் பெறுப்பேற்றுள்ள மாநகர் மன்றத்தின்
ஒன்பதாவது பிராந்தியத்தின் சார்பாக ஷமாளராணிக்கு ரொக்கப் பரிசையும்
வழங்கினார். சுங்கை ரெங்கம் தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவியான
ஷாமளராணிக்கு அதே பள்ளியின் முன்னாள் மாணவர் என்ற
முறையிலும் மாநகர் மன்ற உறுப்பினர் என்ற முறையில் சிறு உதவியை
வழங்குவதில் தாம் பெருமிதம் கொள்வதாக அவர் கூறினார்.

புனோம் பென், க்ரோய் சாங்வார் மாநாட்டு மையத்தில் கடந்த வாரம்
நடைபெற்ற பெண்களுக்கான ஐம்பது கிலோவுக்கும் கீழ்ப்பட்ட கராத்தே
குமித்தே பிரிவு போட்டியில் பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜூன்னா ஷூக்கியை
தோற்கடித்து ஷாமளராணி தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.

கராத்தே விளையாட்டில் மட்டுமின்றி கல்வியிலும் ஷாமளராணி மிகவும்
சிறந்து விளங்குகிறார். எஸ்.பி.எம். தேர்வில் 10 ஏ பெற்று சாதனை புரிந்த
இவர் தற்போது சன்வே பல்கலைக்கழகத்தில் இயல்பு அறிவியல்
துறையில் முதுகலைப் பட்டப்படிப்பை மேற்கொண்டு வருகிறார்.


Pengarang :