NATIONAL

பூசாட் பண்டார்  பூச்சோங்கில் ஆடவர் சுட்டுக் கொலை

கோலாலம்பூர்,  மே  12 - பூசாட் பண்டார் பூச்சோங்கில்  உணவு  விற்பனை 
மையத்திற்கு அருகே  31 வயதுடைய ஆடவர் ஒருவர்  அடையாளம் தெரியாத 
நபர்களால்  சுட்டுக்கொல்லப்பட்டார். 

நேற்று அதிகாலை  மணி  12.35 அளவில் எவரிடே  உணவு   மையத்திற்கு அருகே  
அந்த ஆடவர்  சுட்டுக் கொல்லப்பட்டதை பொதுமக்கள் கண்டதாகச் செர்டாங் மாவட்டப் போலீஸ் தலைவர்   ஏ.சி.பி. ஏ.அன்பழகன்  A தெரிவித்தார்.  

துப்பாக்கிச் சூட்டு காயத்தோடு அந்த ஆடவர் தரையில் இறந்து கிடந்தது குறித்து  தொலைபேசி மூலம் போலீஸ் தகவலைப் பெற்றனர். சவப் பரிசோதனைக்காக அவரது உடல்   செர்டாங் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டது. அந்த ஆடவர் 
உணவகத்திலிருந்து தமது காருக்குத் திரும்பியபோது சுடப்பட்டதாக நம்பப்படுகிறது.  

சுடப்பட்ட அந்த ஆடவர்  21  குற்றப் பின்னணிகளை கொண்டிருந்ததோடு பொக்கா 
எனப்படும் குற்றத்  தடுப்பு சட்டம்  மற்றும்  சொஸ்மா சட்டத்தின் கீழ் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தவர் என்ற தகவலையும் அன்பழகன் தெரிவித்தார்.

Pengarang :