NATIONAL

லங்காவியில் இருந்து கோல பெர்லிஸ் சென்ற பயணப் படகில் சிக்கல்  – பயணிகள் தவிப்பு

கங்கார், மே 16: நேற்று இரவு 8 மணியளவில் லங்காவியில் இருந்து கோல பெர்லிஸ் செல்லும் பயணப்படகு  (பெரி feri) நடு கடலில்  பயண சிக்கலை எதிர் கொண்டது.  கடலில் மிதந்த கயிற்றில் பயண படகின்  விசிறி  சிக்கியதால் சுமார் 140 பயணிகள் மற்றும் பணியாளர்கள் 5 மணி நேரம் தவித்தனர்.

பயணப்படகு  கோல பெர்லிஸிலிருந்து தென்மேற்கில் 2.5 கடல் மைல் தொலைவில் கரை ஒதுங்கியது என மலேசிய கடல்சார் அமலாக்க முகமையின் (APMM) ஆதாரங்கள் காட்டின.

“பயணப்படகு  நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட பயணம்  தாமதமானதால்  நிலைமையை  கண்காணிக்க ஏபிஎம்எம் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது.

மேலும் பயணிகள் அனைவரும் நேற்று நள்ளிரவு 12.20 மணியளவில் கோலா பெர்லிஸ் படகு சேவை  முனையத்திற்கு பாதுகாப்பாக வந்து சேர்ந்தனர்,” என்று செய்தியாளர்கள் தொடர்பு கொண்டபோது கூறப்பட்டது.

தனது இலக்கை சென்றடைய  0.9 கிலோ மீட்டர்கள் மட்டுமே  மீதம் உள்ள நிலையில் இச்சம்பவம் ஏற்பட்டதாக “Ferry Line Ventures Sdn Bhd“ இன் கூட்டமைப்பு மனித வளங்கள் மற்றும் செயல்பாட்டு மேலாளர், கேப்டன் பஹாரின் பஹரோம் கூறினார்.

 பயணப்படகு ( பெரி) யின் விசிறி ஒரு கயிற்றில் சிக்கியதால் பயணம் தாமதமான தாகவும் ஒரு மாற்று படகை அனுப்பியுள்ளதாவும் சூழ்நிலை அனைத்தும் பாதுகாப்பாக இருந்ததாக, அவர் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :