NATIONAL

சிலாங்கூரின்  குழந்தைப் பருவக் கல்வி ஊக்குவிப்பு  திட்டத்தில் பிற நாடுகளும் ஆர்வம்

ஷா ஆலம், மே 16: சிலாங்கூரில் உருவாக்கப்பட்ட குழந்தை பருவக் கல்வித் திட்டத்தில் தென் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற பல நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன.

சமீபத்தில் பனாமாவில் நடந்த சர்வதேச மன்றத்தில் சிலாங்கூரில் குழந்தை நட்பு சமூகத்தை உருவாக்குவதற்கு மாநில அரசின் சாதனைகள் மற்றும் கொள்கைகளை பகிர்ந்து கொண்டதாக உள்ளூர் அரசாங்க எஸ்கோ இங் ஸீ ஹான் கூறினார்.

“சுபாங் ஜெயா மற்றும் பெட்டாலிங் ஜெயா மாநகராட்சிகள் குழந்தைப் பருவக் கல்வியை மேம்படுத்துவதில் மன்றத்தில் பங்கேற்ற நாடுகளின் கவனத்தை ஈர்ப்பதில் வெற்றி பெற்றன.

“ஆட்டிசம் மற்றும் டவுன் சிண்ட்ரோம் போன்ற சிறப்புத் தேவைகள் உள்ள குழந்தைகளுக்கான வெளிப்புற நடவடிக்கைகளை உள்ளடக்கிய திட்டத்தை உருவாக்குவதும் எம்பிஎஸ்ஜேயின் முயற்சிகளில் ஒன்றாகும்.

உலு லங்காட்டில் உள்ள சிலாங்கூர் இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற 2023 முஹிப்பா முகாமின் நிறைவு விழாவிற்குப் பிறகு, “இந்த குழந்தைகள் இயல்பான வாழ்க்கை முறையை வாழ உதவும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது” என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

2019ஆம் ஆண்டில் பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பிலிருந்து (UNESCO) கற்றல் நகரமாக அங்கீகாரம் பெற்றதாக இங் ஸீ கூறினார்.

இந்த அங்கீகாரத்தை பெற 25 பள்ளி மாணவர்களுக்குத் தேவைப்படும் இலவசப் பள்ளி போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி கொடுத்தது காரணமாகும். மேலும், பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி இந்த ஜூன் மாதம் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியத்திடம் இருந்து UNICEF) குழந்தை நட்பு நகர விருதையும் பெறும்.

மேலும். இல்திசம் சிலாங்கூர் பென்யாயாங் திட்டத்தின் மூலம் மாநில அரசு பாலர் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை எட்டு கல்வி உதவிகளை வழங்குகிறது.

கூடுதலாகச் சிறப்புக் குழந்தைகளுக்கான சிலாங்கூர் பாலர் பள்ளி (AnIS)  செக்க்ஷன் 7 மற்றும் அனிஸ் ஆரம்பக் கல்வி ஆதரவு மையத்தை நிறுவுவதன் மூலம் சிறப்புக் குழந்தைகளின் கல்விக்கும் முன்னுரிமை அளிக்கிறது.

சிறப்பு மருத்துவமனைகளில் சிறப்பு குழந்தைகளுக்கான நலத்திட்டம்  மூலம் அவர்களுக்குப் பலன்கள் வழங்கப்படுகின்றன.


Pengarang :