SELANGOR

சிலாங்கூரில் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு

செர்டாங், மே 16: ஏதாவது எதிர்பாராத சம்பவங்கள் நிகழ்ந்தால் சமூக வலைதளங்களில் மட்டும் பரப்பாமல் நேரடியாக காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு காவல்துறை பொதுமக்களுக்கு நினைவூட்டுகிறது.

“சமூக வலைதளங்களில் இது போன்ற சம்பவங்கள் பரப்புவதை விட காவல்துறையிடம் புகார் கொடுப்பது நல்லது,” என்று செய்தியாளர்களிடம் சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசைன் ஓமர் கான் கூறினார்.

இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை சிலாங்கூரில் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக மொத்தம் 155 வழக்குகள் பதிவாகியுள்ளதாக ஹுசைன் கூறினார்.

மேலும், சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், அதில் 33  மாணவர்களும் உள்ளதாக  அவர் கூறினார்.

18 வயதுக்குட்பட்ட பாலியல் குற்றங்கள் ஒரு கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது.மேலும் சட்டத்தை புரிந்து கொள்ளாமல் இருப்பதும் சந்தேக நபர்கள் குற்றம் புரிய காரணமாக அமைகிறது,” என்று அவர் கூறினார்.

இணையம் மற்றும் சமூக ஊடகங்களை எளிதாக அணுகுவதும் வயதுக்குட்பட்ட பாலியல் குற்றங்கள் நிகழ்வில் பங்கு வகிக்கிறது. பெரும்பாலும் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் இச்சம்பவம் அதிகம் நடப்பதாக அவர் கூறினார்.

18 வயதுக்குட்பட்ட பாலியல் குற்றங்கள் ஒரு கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது.மேலும் சட்டத்தைப் புரிந்து கொள்ளாமல் இருப்பதும் சந்தேக நபர்கள் குற்றம் புரிய காரணமாக அமைகிறது,” என்று அவர் கூறினார்.

இணையம் மற்றும் சமூக ஊடகங்களை எளிதாக அணுகுவதும் வயதுக்குட்பட்ட பாலியல் குற்றங்கள் நிகழ்வில் பங்கு வகிக்கிறது. பெரும்பாலும் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் இச்சம்பவம் அதிகம் நடப்பதாக அவர் கூறினார்.

“பள்ளிகளில்  தொடர்பு அதிகாரியை உருவாக்கி மாணவர்களின் செயல்பாடுகளை காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிக்கின்றனர். இருப்பினும், பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் இந்த சிக்கலை தீவிரமாக எடுத்துக் கொள்ளாவிட்டால் அது பயனளிக்காது. அவர்களும் அவர்களின் கடமையைச் சரியாக வகிக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :