SELANGOR

1,200க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கும்புலான் ஹர்தானா சிலாங்கூர் பெர்ஹாத் ஐடில்பித்ரி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்

ஷா ஆலம், மே 16: இன்று SACC மாநாட்டு மையத்தில் 1,200க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கும்புலான் ஹர்தானா சிலாங்கூர் பெர்ஹாத் (KHSB) ஐடில்பித்ரி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார். அவர் கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் உணவருந்தி விருந்தினர்களுடன் கலந்து உரையாடினார்.

நெய் சோறு, ஆயம் மாசா மேரா, டாகேங் மாசா ஹிதாம், மீ கறி, செண்டோல், ஆப்பம் பாலிக், பலகாரங்கள் மற்றும் சுசூர் உள்ளிட்ட பல்வேறு உணவுகளை விருந்தினர்களுக்கு வழங்கப்பட்டன.

மேலும், அமீர் இசைக்குழுவினர், இன்னிசைப் பாடல்களால் விருந்தினர்களை மகிழ்வித்தனர்.

இதற்கிடையில், தனது தரப்பு அலுவலகத்திற்கு வெளியே ஐடில்பித்ரி விழாவை ஏற்பாடு செய்தது இதுவே முதல் முறை எனக் கும்புலான் ஹர்தானா சிலாங்கூர் பெர்ஹாத் தலைமை நிர்வாக அதிகாரி ரஹானா அப்துல்லா கூறினார்.

“எங்கள் நிகழ்வில் கலந்து கொள்ள நேரம் ஒதுக்கிய அனைத்து விருந்தினர்களுக்கும், குறிப்பாக டத்தோ மந்திரி புசார் அவர்களுக்கும் நன்றியை” தெரிவித்துக் கொண்டார்.


Pengarang :