NATIONAL

மூன்று லாரிகளிடையே ஏற்பட்ட விபத்தில் ஓட்டுநர் பலி

பத்து பகாட், மே 16: இன்று அதிகாலை ஜாலான் லாபிஸ்-யோங் பெங்கில் உள்ள போக்குவரத்து விளக்கு அருகே மர கட்டைகளை ஏற்றி சென்ற மூன்று லாரிகளிடையே ஏற்பட்ட விபத்தில் லாரி ஓட்டுநர் ஒருவர் மரணமடைந்தார்.

அதிகாலை 3 மணியளவில் நடந்த இந்த விபத்தில், சம்பந்தப்பட்ட லாரி ஓட்டுநர் முகமட் கைரோல் நிஜாம் ரோகாசி (38) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மற்றொரு லாரியின் ஓட்டுனரான சாரதி முகமட் ஷஹரில் மூசா (27) காயமடைந்துள்ளதாகவும், மற்றொருவர் உயிர் பிழைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லாபிஸில் இருந்து யோங் பெங் நோக்கிச் சென்ற இரண்டு மரக்கட்டை ஏற்றுவந்த லாரிகள் பச்சை விளக்குக்காக காத்திருக்கும் போது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகக் பத்து பஹாட் மாவட்டக் காவல்துறை தலைவர், உதவி ஆணையர் இஸ்மாயில் டோல்லா கூறினார்.

அச்சமயம் மற்றொரு லாரி நின்று கொண்டிருந்த லாரியின் பின் பகுதியில் மோதியதில் தீப்பிடித்ததாக பெரித்தா ஹரியான் தெரிவித்தது.

“பின்புறத்தில் இருந்த லாரி ஓட்டுனர் இருக்கையில் சிக்கி கொண்டதால் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளத் தவறிவிட்டார்,” என்று தெரிவிக்கப்பட்டது.

யோங் பெங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் (பிபிபி) உறுப்பினர்களால் தீயை அணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக வும், உடல் பிரேதப் பரிசோதனைக்காக சுல்தானா நோரா இஸ்மாயில் மருத்துவமனைக்குக் (எச்எஸ்என்ஐ) கொண்டு செல்லப்பட்டது என்றும் இஸ்மாயில் கூறினார்.

சாலை போக்குவரத்து சட்டம் 1987 பிரிவு 41(1)இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.


Pengarang :