NATIONAL

நான்கு இடங்களில் வெப்ப வானிலைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

ஷா ஆலம், மே 17: தீபகற்பத்தில் நான்கு இடங்களில் வெப்ப வானிலைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) தெரிவித்துள்ளது.

அவ்விடங்கள் கோலா க்ராய், பாசீர் மாஸ், ரோம்பின் மற்றும் மூவார் ஆகும் என நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஓர்  அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது.

“இதற்கிடையில், சபா மற்றும் சரவாக்கில் எந்தப் பகுதியும் எச்சரிக்கை நிலையில் இல்லை” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினசரி அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸுக்கும் குறைவாக இருத்தல் வேண்டும்.

ஆனால், தினசரி அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்குத் தொடர்ந்தால் அது முதல் எச்சரிக்கை நிலை ஆகும் என மெட்மலேசியா தெரிவித்துள்ளது.

எச்சரிக்கை நிலை இரண்டில் (உஷ்ண அலை) குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்கு 37 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும்.

எச்சரிக்கை நிலை மூன்றில் தினசரி வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் குறைந்தது மூன்று நாட்கள் தொடர்ந்து இருக்கும்.

தினசரி வெப்ப வானிலை குறித்த தகவலுக்கு, நீங்கள் https://www.met.gov.my/iklim/status-cuaca-panas/ ஐப் பார்க்கவும்.


Pengarang :