NATIONAL

கனடா அனைத்துலக கண்காட்சி வழி சிலாங்கூர் ஹலால் பொருள் சந்தையை விரிவுபடுத்த வாய்ப்பு

ஷா ஆலம், மே 17- கனடாவில் நடைபெறும் அனைத்துலக கண்காட்சியில்
சிலாங்கூர் தொழில் முனைவோர் பங்கேற்பதன் மூலம் உள்நாட்டு
ஹலால் தயாரிப்புப் பொருள்களை அனைத்துலகச் சந்தையில்
பிரபலப்படுத்துவதற்குரிய வாய்ப்பு கிட்டும்.

உலகம் முழுவதும் உள்ள உணவு மற்றும் பானத் தயாரிப்பு பொருள்களை
சந்தைப்படுத்த உதவும் இந்த வருடாந்திர கண்காட்சியில் பங்கேற்பதன்
வழி மாநிலத்திலுள்ள சிறு தொழில் முனைவோர் தங்கள் ஹலால்
உற்பத்தி பொருள்களை விரிவான அளவில் சந்தைப்படுத்துவதற்குரிய
வாய்ப்பினைப் பெற முடியும் என்று ஹலால் தொழில் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் கூறினார்.

உணவு மற்றும் பானங்களைப் பிரபலப்படுத்தும் நோக்கில் இந்த எக்ஸ்போ
சலுன் இண்டர்நேஷனல் டி லாலிமேன்ஷன் மற்றும் எக்ஸ்போ ஹலால்
கனடா எனும் இந்த கண்காட்சி கடந்த 15 ஆண்டுகளாக நடத்தப்பட்டு
வருவதாக முகமது ஜவாவி அகமது முக்னி தெரிவித்தார்.

உள்நாட்டு ஹலால் உற்பத்தி பொருள்களை கனடாவுக்கு ஏற்றுமதி
செய்வது, உற்பத்தி செய்வது மற்றும் சந்தைப்படுத்துவதற்காக வர்த்தக
ஒருங்கமைப்பை நாங்கள் அமல்படுத்தி வருகிறோம் என்று அவர் தனது
பேஸ்புக் பதிவில் கூறினார்.


Pengarang :