SELANGOR

குறைந்த விலையில் பொருள்கள் வாங்க உதவும் பி.கே.பி.எஸ். மலிவு விற்பனை- இல்லத்தரசி பிரமிப்பு

கோல சிலாங்கூர், மே 18- சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக்
கழகத்தின் (பி.கே.பி.எஸ்.) ஏற்பாட்டிலான அத்தியாவசியப் பொருள்களின் மலிவு
விற்பனையில் மிகவும் குறைந்த விலையில் பொருள்களை
வாங்குவதற்குரிய வாய்ப்பு கிடைத்தது குறித்து இல்லத்தரசி ஒருவர்
தனது பிரமிப்பை வெளிப்படுத்தினார்.

இங்குள்ள தாமான் சிரம்பாய் அல்-ஃபாலா சூராவில் நேற்று நடைபெற்ற
புக்கிட் மெலாவத்தி தொகுதி நிலையிலான மலிவு விற்பனையில் கலந்து
கொண்ட சித்தி கினா தாலிப் (வயது 43) என்ற அந்த குடும்ப மாது இது
போன்ற விற்பனையில் தாம் பங்கேற்பது இதுவே முதன் முறையாகும்
எனக் கூறினார்.

பிள்ளைகளைப் பள்ளியில் சேர்ப்பதற்காக இவ்வழியே நான் சென்று
கொண்டிருந்தேன். கூட்டமாக மக்கள் நிற்பதைக் கண்டு என்னவென்று
அறிய இங்கு வந்த நான் அத்தியாவசியப் பொருள்கள் மலிவு விலையில்
விற்கப்படும் தகவலை நண்பர் மூலம் அறிந்தேன் என்று அவர்
குறிப்பிட்டார்.

இதற்கு முன்னர் இத்தகைய மலிவு விற்பனைகளில் பொருள்களை
வாங்காத காரணத்தால் இது எனக்கு புதிய அனுபவமாக இருந்தது. இங்கு
நான் கோழி, இறைச்சி, அரிசி, மீன் ஆகியவற்றை 72.00 வெள்ளிக்கு
வாங்கினேன். வெளியில் இப்பொருள்களை வாங்கியிருந்தால் குறைந்தது
100.00 வெள்ளி செலவாகியிருக்கும் என்றார் அவர்.

இதனிடையே, இத்தகைய மலிவு விற்பனைகளைத் தாம் ஒரு போதும்
தவறவிட்டதில்லை என்று சித்தி சுமியா குட்ரான் (வயது 70) என்ற
மூதாட்டி கூறினார்.

இந்த விற்பனை நடைபெறும் இடங்களுக்கு நான் என் கணவருடன் வந்து
விடுவது வழக்கம். இங்கு அனைத்துப் பொருள்களும் மலிவான விலையில் விற்கப்படுகின்றன. வெளியில் இந்த விலையில் பொருள்களை வாங்க இயலாது என்றார் அவர்.


Pengarang :