NATIONAL

சிலாங்கூர் ஹிஜ்ரா தொழில் முனைவோர் தினம் 2023 இல் பங்கேற்க கிட்டத்தட்ட 100 விண்ணப்பங்கள் 

ஷா ஆலம், மே 18: சிலாங்கூர் ஹிஜ்ரா தொழில் முனைவோர் தினம் 2023 இல் பங்கேற்க விரும்பும் தொழில் முனைவோரிடமிருந்து யாயாசன் ஹிஜ்ரா சிலாங்கூர் கிட்டத்தட்ட 100 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் முன்னணி உள்ளூர் மற்றும் சர்வதேச பல்பொருள் அங்காடிகளிடம் பொருட்களைப் பற்றி கலந்து ஆலோசிக்கும் அமர்வும்  நடைபெறும் என்று தலைமை நிர்வாக அதிகாரி நோர்மைஷா யாயா கூறினார்.

“இந்தத் திட்டமானது, தங்கள் தொழிலை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றவும் விரிவுபடுத்தவும் விரும்பும் தொழில் முனைவோரை இலக்காகக் கொண்டுள்ளது.

“இந்நிகழ்வில் தொழில் முனைவோர் முன்னிலைப்படுத்த விரும்பும் தயாரிப்புகளின் நன்மைகள் பற்றி கேட்க சூப்பர் மார்க்கெட் பிரதிநிதிகள் நீதிபதிகளாக அழைக்கப்படுவார்கள்,” என்று அவர் கூறினார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில் முனைவோர் தங்கள் தயாரிப்புகளை சம்பந்தப்பட்ட அங்காடிகளில்  சந்தைப்படுத்த வாய்ப்பு உள்ளது என்றும் நோர்மைசா விளக்கினார்.

முன்னணி பல்பொருள் அங்காடிகளின் சந்தையில் ஊடுரவுவதற்கான வாய்ப்பு எளிதான விஷயம் அல்ல என்று விவரித்தார்.

“ஹிஜ்ரா அறக்கட்டளை எப்போதும் தொழில் முனைவோர் தங்கள் வணிகத்தை முன்னேற்றுவதற்கு உதவுவதோடு, உள்ளூர் மற்றும் உலக அளவில் போட்டி தன்மையுடன் இருக்கவும் விரும்புகிறது,” என்று அவர் கூறினார்.

சிலாங்கூர் ஹிஜ்ரா தொழில் முனைவோர் 2023 விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் தகவல்கள் அதிகாரப்பூர்வ சேனல்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் ஏஜென்சியால் அறிவிக்கப்படும்.


Pengarang :