SELANGOR

இளைய சமுதாயத்துடன் இணைந்து ஜோம் ஹெபோ கார்னிவலில் சிலாங்கூர் அரசு முதல் முறையாக பங்கேற்பு

ஷா ஆலம், மே 20: இளைய சமுதாயத்திற்கு  ஊக்கமூட்டும்   ஜோம் ஹெபோ கார்னிவல் மீடியா ப்ரிமா பெர்ஹாட் ஏற்பாட்டில்   ஜூன் 2 முதல் 4 வரை  நடைபெறுகிறது, இதில்  சிலாங்கூர் அரசு முதல் முறையாக பங்கேற்கவுள்ளது.

ஷா ஆலம் ஸ்டேடியம்   அரங்கத்தில் காலை 10 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை நடைபெறும் இந்நிகழ்ச்சியை டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தொடக்கி வைப்பார் என்று இளம் தலைமுறை பொறுப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.

“இந்த நிகழ்வு இளைஞர்களை அணுகுவதற்கான ஒரு செயல்பாடாகும். அதே வேளையில், “குடும்பம் மற்றும் விளையாட்டுக்“ என்ற கருப்பொருளைக் கொண்ட நடவடிக்கைகளை ஏற்பாடு செய்வதன் மூலம் ஒரு நாகரீக சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பதைக் நம்புகிறோம்.

“இந்நிகழ்வில் மாநில அரசு ஏற்பாடு செய்துள்ள அனைத்து திட்டங்களையும் மற்றும் கொள்கைகளையும் விளம்பரப் படுத்துவோம்” என்று முகமட் கைருடின் ஓத்மான் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

மூன்று நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சி, ஷா ஆலம் மாநகராட்சி, பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் எஸ்டிஎன் பிஎச்டி மற்றும் யாயாசான் தேசிய நலன் அறக்கட்டளை உட்பட பல தரப்புகளின் ஒத்துழைப்பையும் பெற்றுள்ளது.

“இந்நிகழ்வில் கால்பந்து போட்டி, தற்காப்பு கலை, கூடைப்பந்து, இசை போட்டிகள் மற்றும் உணவு திருவிழா” போன்ற நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக என்று அவர் கூறினார்.


Pengarang :