SELANGOR

ஸ்ரீ அண்டலாஸ் இந்து சங்கப் பேரவையின் ஏற்பாட்டில் “வணிகக் களம்“ நிகழ்வு

கிள்ளான், மே 25- மலேசிய இந்து சங்க ஸ்ரீ அண்டலாஸ் கிளையின்
ஏற்பாட்டில் “வணிகக் களம்“ எனும் நிகழ்வு இம்மாதம் 21ஆம் தேதி
இங்குள்ள தாமான் செந்தோசா பல்நோக்கு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்திய தொழில்முனைவோருக்கு வர்த்தகம் தொடர்பான
வழிகாட்டுதல்களை வழங்கும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த கருத்தரங்கில்
செந்தோசா சட்டமன்ற உறுப்பினரும் இந்திய சமூகத்திற்கான மந்திரி
புசாரின் சிறப்பு அதிகாரியுமான டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் சிறப்பு வருகை
புரிந்து உரையாற்றினார்.

இந்த நிகழ்வில் மலேசிய நிறுவன ஆணையத்தின் அஸூரா நோர் மற்றும்
கவிமாறன், சொக்சோ எனப்படும் சமூக பாதுகாப்பு நிறுவனத்தின்
வி.மோகனதாஸ், கோத்தா ராஜா ஹிஜ்ரா கிளையின் பிரதிநிதிகளான
நோர்ஷிலா மற்றும் மாதவன், சித்தம் எனப்படும் சிலாங்கூர் இந்திய
தொழில் ஆர்வலர் மையத்தின் பிரதிநிதி ஜோன் ஆகியோர் கலந்து
கொண்டு பங்கேற்பாளர்களுக்கு பல்வேறு விளக்கங்களை வழங்கினர்.

காலை 10.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை நடைபெற்ற இந்த
நிகழ்வில் சிலாங்கூர் அரசின் இல்திஸாம் சிலாங்கூர் பென்யாயாங்
திட்டங்கள் குறித்தும் விளக்கம் தரப்பட்டது.


Pengarang :