SELANGOR

குழந்தைகளுக்கான இலவச நீச்சல் பயிற்சியாளர்கள் – செலாயாங் நகராண்மை கழகம்

செலாயாங், ஜூன் 1: செலாயாங் நகராண்மை கழகம், பள்ளி விடுமுறையின் போது இங்குள்ள ஜாலான் சுங்கை துவாவில் உள்ள ஶ்ரீ சியாந்தன் நீச்சல் வளாகத்தில் குழந்தைகளுக்காக இலவச நீச்சல் பயிற்சியாளர்களை நியமித்து உள்ளது.

ஆறு முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு நீச்சல் அடிப்படைகளை அப்பயிற்சியாளர்கள் கற்பிப்பர் என்று யாங் டிபெர்துவான் டத்தோ முகமட் யாசிட் சாய்ரி கூறினார்.

“பள்ளி விடுமுறையை முன்னிட்டு குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்காக நடவடிக்கைகளைத் தேடும் சிலர் நம்மில் உள்ளனர் என்று நான் நம்புகிறேன்.

“உங்கள் நீச்சல் திறமையை வெளிக்கொணர ஸ்ரீ சியாந்தன் நீச்சல் வளாகத்திற்கு வருமாறு அழைக்கிறோம். மேலும் அங்கு குழந்தைகளும் நீச்சலின் அடிப்படைகளை இலவசமாக கற்றுக் கொள்ளலாம்” என்று இன்று பழைய எம்.பி.எஸ் கட்டிடத்தில் நடைபெற்ற எம்.பி.எஸ் மாதாந்திர கூட்டத்தில் பேசும் போது கூறினார்.

அந்த நீச்சல் வளாகம் ஒவ்வொரு நாளும் காலை 9 மணி முதல் இரவு 8.30 மணி வரை (திங்கள் மற்றும் வெள்ளி மதியத்திற்குப் பின்) திறந்திருக்கும்.

“டிக்கெட்டுகளுக்காக வசூலிக்கப்படும் கட்டணம் மிகவும் நியாயமானவை அதாவது பெரியவர்களுக்கு RM4 மற்றும் குழந்தைகளுக்கு RM2 ஆகும்.

“அங்கு ஆடை அறைகள், பார்வையாளர்கள் இடங்கள், சுராவ் மற்றும் பல்வேறு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன,” என்று அவர் கூறினார்.


Pengarang :