NATIONAL

8,160 கோடி டாலர் மதிப்புள்ள சொத்துகளுடன் ஃபோர்ப்ஸ் பணக்காரர்கள் பட்டியலில் 50 மலேசியர்கள்

சிங்கப்பூர், ஜூன் 1- மலேசியாவின் 2023ஆம் ஆண்டிற்கான 50 பெரும்
பணக்காரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் ஆசியா ஆய்வு நிறுவனம்
வெளியிட்டுள்ளது. கடந்தாண்டு பங்குச் சந்தை வீழ்ச்சி கண்ட போதிலும்
அவர்கள் சொத்து மதிப்பு 8,160 அமெரிக்க டாரலாக (37,610 கோடி வெள்ளி)
உயர்ந்துள்ளது.

எதிர்வரும் அக்டோபர் மாதம் 100 வயதை எட்டவிருக்கும் மலேசியாவின்
பெரும் பணக்காரரான டான்ஸ்ரீ ரோபர்ட் குவோக், கடந்த 25 ஆண்டுகால
தன் வசம் உள்ள முதல் இடத்தை தொடர்ந்து தக்க வைத்துக்
கொண்டுள்ளார்.

இவரின் சொத்து மதிப்பு 1,180 கோடி அமெரிக்கா டாலராகும். மலேசிய
ரிங்கிட்டின் மதிப்பில் இது 5,435.43 கோடி வெள்ளியாகும். அமெரிக்க
டாலரில் இரட்டை இலக்க வருமானத்தைக் கொண்ட ஒரே
கோடீஸ்வரராக ரோபர்ட் குவோக் விளங்குகிறார்.

ஹோங் லியோங் குழுமத்தின் நிர்வாகத் தலைவர் டான்ஸ்ரீ குவேக் லெங்
சான் 1,020 கோடி டாலருடன் ( 4,702 கோடி வெள்ளி) சொத்துகளுடன்
இரண்டாம் இடத்தில் உள்ளார்.

எஃகு தொழிலில் ஜாம்பவான்களாக விளங்கும் டான்ஸ்ரீ கூன் போ கியோங்
மற்றும் அவரின் சகோதரர்கள் மூன்றாம் இடத்தை தொடர்ந்து தக்க
வைத்துக் கொண்டுள்ளனர். இவர்களின் மொத்த சொத்து மதிப்பு 580 கோடி
டாரலராகும். இதன் மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 2,670 கோடி வெள்ளி.

இதனிடையே, மெக்சிஸ் நிறுவன உரிமையாளரான டான்ஸ்ரீ ஆனந்த
கிருஷ்ணனின் சொத்து மதிப்பு கடந்தாண்டை விட 40 கோடி டாலர்
உயர்ந்து 540 கோடி டாலராக (2,480 கோடி வெள்ளி) உயர்ந்துள்ளது.

கோடீஸ்வரர்கள் பட்டியலில் தொடர்ந்து இடம் படித்து வந்த பப்ளிக் பேங்க்
நிறுவனர் டான்ஸ்ரீ தே ஹோங் பியாவ் கடந்தாண்டு டிசம்பர் மாதம் காலமானதைத் தொடர்ந்து அவரின் பிள்ளைகள் 520 அமெரிக்க டாலர் சொத்துகளுடன் இந்த பட்டியலில் புதிதாக இடம் பிடித்துள்ளனர்.


Pengarang :