NATIONAL

பேரரசர் மற்றும் ராஜா பெர்மைசூரி இருவரும் கவாய் தின வாழ்த்துகளைத் தெரிவித்தனர்

கோலாலம்பூர், ஜூன் 1: பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா மற்றும் ராஜா பெர்மைசூரி அகோங் தெங்கு அஜிசா அமினா மைமுனா இஸ்கந்தரியா தம்பதியர் கவாய் தின வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இப்பண்டிக்கை மலேசியாவில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், மக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்தவும் தொடரும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

“இப்பண்டிகை அனைவருக்கும் செழிப்பு, நல்வாழ்வு, அமைதி மற்றும் மகிழ்ச்சியைத் தரும் என்று தம்பதியினர் நம்பிக்கை தெரிவித்தனர்” என்று இஸ்தானா நெகாரா முகநூல் பதிவில் தெரிவித்தது.

அறுவடை காலம் முடிந்த பிறகு அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகச் சரவாக்கில் உள்ள டயாக் சமூகத்தால் கவாய் பண்டிகை இன்றும் நாளையும் கொண்டாடப்படுகிறது.

– பெர்னாமா


Pengarang :