SELANGOR

பைனரி பல்கலைக்கழகத்தில் படிப்பைத் தொடர முழு உபகாரணச் சம்பளம் பெற வாய்ப்பு

ஷா ஆலம், ஜூன் 6: மேருவைச் சேர்ந்த மொத்தம் 20 எஸ்.பி.எம் (SPM) முடிந்த மாணவர்கள் பைனரி பல்கலைக்கழகத்தில் படிப்பைத் தொடர முழு உபகாரணச் சம்பளத்தைப் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.

மைபினரி ஒற்றுமை உதவித்தொகை மூலம், மாணவர்கள் RM73,000 வரை நிதியுதவி பெற தகுதியுடையவர்கள். “இந்த உதவித்தொகை கணக்கியல், வணிக ஆய்வுகள், கணினி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேலாண்மை ஆகிய ஏழு பாடத் திட்டங்களுக்கு வழங்கப்படுகிறது என மேரு தொகுதி உறுப்பினர் முகமட் ஃபக்ருல்ராசி மொக்தார் கூறினார்.

மேலும், கணினி கல்வி, நிர்வாகம், சந்தைப்படுத்தல் மற்றும் தொழில்முனைவோர் ஆகியவற்றைப் பயிலும் மாணவர்களுக்கு இது திறக்கப்பட்டுள்ளது” என்று அவர் முகநூல் மூலம் தெரிவித்தார்.

ஐந்து கிரடிட் பெற்ற தொழிற்கல்வி மற்றும் எஸ்.பி.எம் மாணவர்களுக்காக இந்த சலுகை திறக்கப்பட்டுள்ளது என்றும் //binary.edu.my/mybus வழியாக அதற்கு விண்ணப்பம் செய்யலாம் என்றும் முகமட் ஃபக்ருல்ராசி கூறினார்.

“மாணவர்கள் முழுப் படிப்பையும் முடிக்க வேண்டும். படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் அல்லது அதனைத் தொடராதவர்கள் கல்விக் கட்டணத்தை முழுமையாகச் செலுத்த வேண்டும்,” என்றார்.


Pengarang :